#100நாடுகள்100சினிமா #21. JAPAN - CONFESSIONS (2010)

12:33:00 AM

Tetsuya Nakashima | Japan | 2010 | 106 min.

நான் பார்த்த வரை ஜப்பானில் இருந்து அகிரா குரசோவா படங்கள் தொடங்கி Takeshi Kitano, Takashi Mike படங்கள், Hayao Miyazaki இன் அனிமேஷன் படங்கள், Departures (2008), Like Father Like Son (2013), Battle Royale (2000), Nobody Knows (2004), Cold Fish (2010), Still the Water (2014) என்று பல பார்க்க வேண்டிய, முக்கியமான படங்கள் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் - #100நாடுகள்100சினிமா என்று ஒரு தொடர் எழுதலாம் என்று முடிவு செய்த அன்றே சில நாடுகளுக்கு எந்தப் படங்களை எழுத வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன். ஜப்பானிற்கு - Confessions (2010).

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்த படம் (ஜூலை 2014). ஒரு காட்சி விடாமல் இன்றும் நினைவில் இருக்கிறது.

கலாட்டாவாகத் தொடங்குகிறது படம். வகுப்பறை. கத்திக்கொண்டும், செல்போனை நோண்டிக்கொண்டும், ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டும் சந்தோஷமா அமர்ந்திருக்கிறார்கள் மாணவர்கள். வகுப்பின் ஆசிரியை Yuko Moriguchi ருகிறார். வந்தவர் அமைதியாக, 'ந்த ஆண்டின் இறுதியிலிருந்துான் எனது ஆசிரியர் வேலையை விட்டுவிட முடிவுசெய்திருக்கிறேன்' என்கிறார். ாணவர்களிடமிருந்து பலத்த கைதட்டல், ஆரவாரம், சிரிப்பலை. சிறிது நேரம் அவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துவிட்டு வேலையை விட்டுச் செல்வதற்கான காரணங்களை பொறுமையாகக் கூறத் தொடங்குகிறார்.

Yuko கூறும் காரணமும் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான் படம். படத்தின் முதல் அரைமணி நேரம் ஒரு தனி குறும்படம் போல எடுக்கப்பட்டிருக்கிறது. படமே கிட்டத்தட்ட இதன் பிறகு தான் தொடங்குகிறது. படத்திற்கான ஒரு Prologue - அதாவது முன்னோட்டம் போல சொல்லப்படுகிறது Yuko வின் கதை. இந்த முதல் அரை மணிநேரம் நம்மை அசத்தப்போவது உறுதி. இத்தனைக்கும் பின்னணியில் Yuko பேசிக்கொண்டிருக்க, மான்டேஜ் காட்சிள் தான் நமக்கு காட்டப்படும். ஆனால் கண் இமைக்காமல், அதிர்ச்சி விலகாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். அதன்பிறகு வரும் காட்சிகள், நடக்கும் சம்பவங்களுக்கு நம்மை பக்காவாக தயார் செய்கிறது இந்த முதல் 30 நிமிடங்கள்.

படத்தொகுப்பு எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த இடங்களில் ஸ்லோ-மோஷன் உத்தியை பயன்படுத்த வேண்டும், மான்டேஜ் காட்சிகளை எப்படி, எங்கெல்லாம் பயன்படுத்தலாம் - இதையெல்லாம் இந்தப் படத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். தேர்தெடுக்கப்பட்ட களம், எழுதப்பட்டுள்ள திரைக்கதை, டிகர்களது நடிப்பு (முக்கியமாக அந்த மாணவர்களது நடிப்பு), டெக்னிக்கல் விஷயங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.


இது ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகைப் படம். படம் சொல்லும் கதை நிச்சயம் அதிர்ச்சி ரகமே. மற்றுமொரு படமாக, ரிலாக்ஸ்டாக ஒரு மாலைப்பொழுதில் எதையாவது பார்க்கலாம் என்று இந்தப் படத்தைத் தேர்ந்தெடுப்பதுப் பார்ப்பது ஆபத்து. வெறும் கோரம், வக்கிரம், ரத்தகளறி வகையறா படங்கள அல்லாமல் சில படங்கள் நம்மை மனதளவில் பாதிப்படைய வைக்கும். இரண்டொரு நாட்களுக்குத் தூங்கவிடாது. நம்மையும் அறியாமல் ஒரு வித பய உணர்வு நம்மை ஆட்கொள்ளத் தொடங்கும். இது அந்த மாதிரியானதொரு படம். ஓவர் பில்டப் ஆக இருக்கிறதே என்று நினைக்கவேண்டாம். கோரப்படங்கள் பார்த்து கரைகண்டவர்களுக்கு இந்தப் படம் சர்வசாதாரணமாகக் கூட இருக்கலாம். ஆனால் நிதர்சனத்தின் உண்மை முகம் தெரியாமல் நல்லவர்கள் மத்தியில் பாதுகாப்பானதொரு உலகத்தில் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வெளியுலகம் தெரியா கிணற்றுத்தவளைகளுக்கு இந்தப் படம் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கவல்லது.

டத்தை எழுதி, இயக்குயிருப்பவர் Tetsuya Nakashima. இதுவரை 13 படங்கள் இயக்கியிருக்கிறார். இவரது சமீபத்திய படமான The World of Kanako (2014) படமும் பார்க்க வேண்டிய படமே. Kanae Minato என்பவர் எழுதிய நாவல் இந்தக் கதைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

படம் பற்றி வேறெதுவும் சொல்லவேண்டாமென்று நினைக்கிறேன். படத்தின் டிரைலரைக் கூடப் பகிரப்போவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி - நான் இதுவரை பார்த்த ஜப்பானியப் படங்களிலேயே மிக முக்கியமானதாக இந்தப் படத்தைக் கருதுகிறேன். பல நினைவலைகளையும், சந்தேகங்களையும், கோபத்தையும் தூண்டிபடம் இது.

அவசியம் பார்த்தே தீரவேண்டிய படம். இந்தப் படம் சொல்லப்பட்ட முடிவுசரிஎன்றே எனக்குத் தோன்றினாலும், அனைவரும் இந்த முடிவை ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியவில்லை, அதைப் பற்றி வாதம் செய்யவும் நான் விரும்பவில்லை.

ஜப்பானில் நடைமுறையில் உள்ள Juvenile Law of 1947 ற்றி பேசுகிறது இந்தப் படம். இது நம் நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல டெல்லி திர்பயா வழக்கிற்குப் பிறகு ஏற்பட்ட விவாதங்களின் முடிவாக, 15 ஜனவரி 2016 முதல் 16 - 18 வயதுள்ளவர்களையும் பெரியவர்கள் என்றே கணக்கிட்டு நீதி வழங்கப்படும் என்று சட்டம் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது.

(பி.கு - இன்று காலை ஒரு செய்தி. இந்தச் செய்தியை வாசித்த பிறகு, பல்வேறு எண்ணங்களுக்கு மத்தியில் இந்தப் படமும் நியாபகத்திற்கு வந்தது.

உத்திரப்பிரதேச கிராமம் ஒன்றில் (Sikariha Chhata Village. Mauaima Police Station Area), தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிக்கொண்டு போய் கற்பழித்து வயல்வெளியில் வீசிவிட்டுச் சென்றுவிட்டான் ஒருவன். பக்கத்துவீட்டுக்காரன் தான் குற்றவாளி என்று தெரிந்ததும் போலீஸ் புகார் அளித்துள்ளனர். குற்றவாளியின் தந்தை ஊர்ப்பெரிய மனுஷனின் நெருங்கிய நண்பர் என்பதால் ரேப் கேஸ் போடுவதில் பெரும் தயக்கம் காட்டியிருக்கிறது போலீஸ். ஒருவழியாக FIR எழுதப்பட்டு, குற்றவாளி ஜெயிலில் அடைக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு சரியாக 3 வாரங்கள் ஆன பின்பு இரண்டு நாட்களுக்கு முன்பு (29.06.2016) கற்பழித்ததாகச் சொல்லப்பட்டவனின் உறவினர்கள் ஐவரால் அந்த 7 வயதுச் சிறுமி கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டாள். குழந்தையின் உடலை வாங்க மறுத்த பெற்றோர், உறவினர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளதாகவும் தகவல்.

சொல்ல மறந்து விட்டேன். 7 வயதுச் சிறுமியை ரேப் செய்து தூக்கி வீசி, உறவினர்கள் கோப்பப்பட்டு குழந்தையைப் பழிவாங்கக் காரணமாக இருந்த அந்தப் பக்கத்துவீட்டுக்காரனின் வயது - 14. இந்த தேசத்தில் ஒருவனாக, ஆணாக இருப்பதற்கு வெட்கப்பட்டு அழுதுகொண்டிருக்கிறேன் நான்)

**********************************

Confessions begins with a high school teacher, Yuko Moriguchi who enters class and announces her decision to leave her job from the end of the year. The aftermaths of her decision and the people around the decision is the whole story. The story is unfold mostly in first-person narrative style in a non-linear manner.

This is a psysological thriller which will shock you not just in the end but right from the beginning. The truth said in the story is bitter and scary. With wonderful acting, perfect editing, well used slow-motions, Confessions is a technically brilliant film also.

Dir. Tetsuya Nakashima
Written and Directed by Tetsuya Nakashima, this movie is based on a novel by Kanae Minato. The movie speaks about the Juvenile Law of 1947 which is still in practice in many countries which prevents criminals under age 18 to be treated and judged as adults.

a must watch movie. weak hearted or strong, this movie is shocking and it's for everyone to see.

Saw this movie some 2 years back and remembered suddenly when I came across this news today morning - http://zeenews.india.com/news/uttar-pradesh/up-7-year-old-girl-raped-later-killed-police-refuse-to-handover-body-beat-up-family-members_1901879.html  

Trailer - I am not sharing the trailer. The movie is worth. Please download & watch. NOW.


You Might Also Like

2 comments

  1. பரிந்துரைத்தமைக்கு நன்றி...
    படத்தைப் பார்த்தேன், சொல்லெண்ணா உணர்வுகளும் எண்ணங்களும் வந்து போயின..
    எந்த வயதாயிருந்தாலும், தெரிந்தே திமிரில் குற்றமிழைத்தால் தண்டனை தந்தே ஆக வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. இந்தப் படம் கொடுக்கும் தாக்கத்திலிருந்து வெளிவர சில நாட்கள் ஆகலாம். அருமையான, அதைவிட அவசியமான படம் என்பது என் கருத்து

      நன்றி

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...