‪#‎100நாடுகள்100சினிமா‬ #20.GERMANY - DIE WELLE (2008 - The Wave)

11:29:00 PM

Dennis Gansel | Germany | 2008 | 107 min.

(*** English write-up and download link given below ***)

பார்த்தே தீர வேண்டிய உலகப்படங்கள் - என்று ஒரு பொதுவாக ஒரு லிஸ்ட் என்னிடம் கேட்டால், ஜெர்மனியிலிருந்து மட்டும் சுமார் 10 படங்களைச் சொல்வேன்அந்தப் படங்கள்,

1. The Lives of Others (2006)

2. Downfall (2004)

3. Baader Meinhof Konplex (2008)

4. Goodbye Lenin! (2003)

5. The White Ribbon (2009)

6. The Edukators (2004)

7. The Edge of Heaven (2007)

8. Phoenix (2014)

9. Sophie Scholl: The Final Days (2005)

10. Labyrinth of Lies (2015)

இந்தப் பத்துமே நான் பார்த்த, பார்த்தே தீர வேண்டிய படங்கள் (2000 க்குப் பிறகு வெளியானவை). இவை கொஞ்சம் பிரபலமான படங்களும் கூட. குறைந்தது இதில் 5 படங்களையாவது உலக சினிமா பற்றிய அறிமுகமும் ஆர்வமும் உள்ளவர்கள் பார்த்திருப்பார்கள் (பார்த்திருக்க வேண்டும்). இதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பதா அல்லது அதிகம் அலசப்படாத ஒரு படத்தைத் தேர்தெடுப்பதா என்று தேடிய பொழுது கிடைத்தது இந்த Die Welle (2008). இதே ஆண்டு வெளியான மிக முக்கியமான சரித்திரப் படமான Baader Meinhof Konplex (2008) க்கு இருந்த வரவேற்பு இந்தப் படத்திற்கு இல்லை என்பது ஆச்சரியம். காரணம் இந்த படம் ஆம் ஆண்டு வெளியான ஜெர்மன் படமான Das Experiment (2001) படசாயலில் இருப்பதால் கூட இருக்கலாம்.

Rainer Wenger, ஸ்கூல் வாத்தியார். Political Science பாடம் எடுப்பவர். கூடவே அந்தப் பள்ளி மாணவர்களது விருப்ப விளையாட்டான Water Polo (நீச்சல் குள வாலிபால்) கோச் ஆகவும் இருக்கிறார். இவரது மனைவியும் அதே பள்ளியில் பணியாற்றுகிறார். பள்ளியில் ஒரு வார ப்ராஜெக்ட்டாக மாணவர்களுக்கு Autocracy (சர்வாதிகாரம் அல்லது வரம்பற்ற அதிகாரம்) பற்றி பாடமெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. Rainer க்கு இந்தத் தலைப்பில் ஈடுபாடு இல்லையென்றாலும் நிர்பந்தம் காரணமாக ஒத்துக்கொள்கிறார்


அவரது வகுப்பில் வந்தமரும் மாணவர்களுக்கு, ஹிட்லர் மீதும் நாஜிக்கள் மீதும் வெறுப்பும், ஜெர்மனி அவர்களால் இன்றுவரை குற்ற உணர்வில் இருப்பதாக கோபமும் உள்ளது. உலகப்போரிலிருந்து ஜெர்மனி மீண்டு, இப்போது மூன்றாவது தலைமுறையாக (Third Generation after the War) இருக்கும் இவர்களைப் பொறுத்தவரை சர்வாதிகாரம் என்பது இன்றைய சூழலில் சாத்தியமில்லாத ஒன்று. Autocracy பற்றி இந்த மாணவர்களுக்குப் புரிய வைக்க, அதையே ஒரு வாரம் அந்த மாணவர்கள் அளவில் நடைமுறைபடுத்த முடிவுசெய்கிறார் Rainer. 

அதன்படி முதற்கட்டமாக மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களது ஒப்புதலில் பேரில் தன்னை அந்தக் குழுவின் தலைவராக அறிவித்துக்கொண்டு படிப்படியாக சில விதிமுறைகளையும் வகுக்கிறார். விருப்பமில்லாத மாணவர்கள் உடனே வெளியேறிவிடலாம் என்ற சாய்ஸும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்தும் பள்ளித் தலைமையிலிருந்தும் இதற்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. இந்த மாணவர் இயக்கத்திற்கு The Wave (Die Welle) என்று பெயர் வைக்கப்படுகிறது.

அந்த 6 நாட்கள் The Wave இயக்கத்தினர் என்னென்ன செய்தார்கள்? சர்வாதிகாரம் சாத்தியமே இல்லை என்று சொன்ன மாணவர்கள் வகுப்பு முடிவிலும் அதே நிலையில் தான் இருந்தார்களா? The Wave இன் தாக்கம் எந்த அளவில் இருந்தது? Rainer செய்தது சரியா? - இந்தக் கேள்விகளுக்கான பதில் தான் இந்தப் படம்.

History Teacher Ron Jones
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். அமெரிக்க கலிபோர்னியா நகரில் 1967, ஏப்ரல் முதல் வாரம் வராலாறு ஆசிரியர் Ron Jones, தனது Contemporary World History' வகுப்பில் மாணவர்களுக்கு இராண்டாம் உலகப்போர் பற்றியும் ஹிட்லர் பற்றியும் ஜெர்மனி மக்கள் ஹிட்லரது சர்வாதிகார ஆட்சி முறைக்கு மறைமுகமாக எப்படி ஆதரவளித்தனர் என்பது பற்றியும் விளக்க நினைத்தார். மாணவர்கள் இதெல்லாம் இப்போது சாத்தியமே இல்லை என்று வாதாட, அதையே 5 நாட்கள் நடைமுறைபடுத்தி அவர் நடத்திய சோதனையின் பெயர் - The Third Wave Experiment. இதன் திரைப்பட வடிவம் தான் ஜெர்மனியின் இந்த Die Welle.

அதிகாரம் - இதன் தாக்கத்தை வீட்டில், அலுவலகத்தில், பொதுவெளியில் என்று எட்டுத்திக்கும் தினம் உணர்ந்து கொண்டிருக்கிறோம் நாம். அதுவே சர்வாதிகாரம் என்று வரும்பொழுது? இந்தக் கேள்விக்கான பதில் தான் இந்தப் படம். விளையாட்டாக மாணவர்களவில் தொடங்கப்படும் ஒரு பயிற்சி, படிப்படியாக ஒருவிதமான பதற்ற சூழல் உருவாகக் காரணமாவதை மிகச் சிறப்பாகக் காட்சிபடுத்திருக்கிறார்கள். Rainer இதை நடைமுறை பயிற்சியாக, ஒரு பாடமாக மட்டுமே முன்னிறுத்த நினைத்துத் தொடங்கியிருப்பார். ஆனால் நாளடையில் நிலைமை கைமீறிப்போவதையும், சர்வாதிகாரம் என்ற பிடியில் தானும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்கிக்கொள்வதையும் உணரும் இடங்கள் அருமை.

ஆனால் - Das Experiment (2001) அளவிற்கு BP ஏற்றவில்லை. வீரியம் குறைவு. தாக்கத்தைச் சொல்லியிருக்கிறார்கள். தாக்கவில்லை (மனதளவில்). படத்திய இயக்கியிருப்பவர் Dennis Gansel. 

மேலே கொடுக்கப்பட்டுள்ள பத்தோடு பதினொன்றாக இந்தப் படத்தையும் பார்த்தே தீர வேண்டிய லிஸ்ட்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பதிவு பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

***********************************

Rainer Wenger is a school teacher and Waterpolo Coach. As a one week session, he is forced to teach a class on Autocracy. The Students being the third generation after the World War are against Dictatorship and strongly believe something like that is not at all possible in Modern Germany. To explain them better in a practical way, Rainer begins an experiment that demonstrates Autocratic principles. He declares himself the leader of the group (after students approval) and names themselves, The Wave. What happens to the students and Rainer during the 6 days of the experiment forms the rest of the story.

Director Dennis Gansel
Similar to 'Standford Prison Experiment' based Geman Movie Das Experiment (2001), Die Welle is also based on a true Experiment, 'The Third Wave' which was conducted by a California History Teacher, Ron Jones during the first week of April, 1967. Unlike Das Experiment which is hard-hitting, Die Welle directed by Dennis Gansel totally focuses on Autocracy as a principles and its after effects.   

A must watch movie.

Other Recommended movies from Germany:
The following 10 movies are must watch World Films (released after 2000). Die Welle can be numbered as #11.

1. The Lives of Others (2006), 2. Downfall (2004), 3. Baader Meinhof Konplex (2008), 4. Goodbye Lenin! (2003), 5. The White Ribbon (2009), 6. The Edukators (2004), 7. The Edge of Heaven (2007), 8. Phoenix (2014), 9. Sophie Scholl: The Final Days (2005), 10. Labyrinth of Lies (2015)



You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...