2014 மலையாளத் திரைப்படங்கள் ஒரு பார்வை
12:59:00 AM
இந்த வருடமும் கேரளத்துக்காரர்கள் வெரைட்டியான
ஏரியாக்களில் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிற
“பேய் படங்கள்” ஒன்று கூட மலையாளத்தில் வெளிவராதது ஆச்சரியம். சென்ற வருட இறுதியில்
மெகா ஹிட் கொடுத்த மோகன்லால் இந்த வருடம் நடித்த மூன்று படங்களுமே குப்பை. மம்மூட்டிக்கு
இந்த வருடம் 7 படங்கள் இருந்தாலும் அவற்றில் 2 மட்டும் தான் பார்க்கும்படி இருந்தது.
2013 ஆம் ஆண்டு அதிகப்படங்களில் நடித்து, அதிக வெற்ற்ப்படங்களையும் கொடுத்த ஃபகத் பாசிலுக்கும்
இந்த வருடம் சிறப்பானதாக அமையவில்லை. ப்ரித்விராஜ் நடித்த 5 படங்களும் சொல்லிக்கொள்ளும்படியான
வெற்றியை எல்லாம் பெறவில்லை. ஸ்டார்கள் எல்லாம் மண்ணைக்கவ்விய இந்த வருடத்தில் வெற்றி
பெற்றது இரண்டு பெண்கள் தான். ஒருவர் மஞ்சுவாரியர் – How Old Are You படத்தின் மூலம்.
மற்றொருவர் இயக்குனர் Anjali Menon – Bangalore Days படத்தின் மூலம். இவர்களுக்கு அடுத்து சத்தமில்லாமல் அதிக ஹிட்களைக் கொடுத்து தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர் நிவின் பாவ்லி.
இந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில்
நான் பார்த்த வரையில் சிறந்த 10 படங்களை மட்டும் உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்.
இந்தப் படங்களில் சிலவற்றை "பெஸ்ட்" என்று சொல்ல முடியாது என்றாலும் குறைந்தபட்சம் பார்க்கும்படியாவது
இருக்கும்.
(பி.கு – இந்த வருடமும் தமிழர்களை முடிந்தவரை
வில்லனாக, நெட்கட்டிவ் கேரக்டர்களாக, கேலிப்பொருளாக கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.
இது என்று மாறும் என்று தெரியவில்லை.)
BANGALORE DAYS
இந்த வருடம் வெளியான மிகச்சிறந்த இந்தியப்
படங்களில் ஒன்று Bangalore Days. படத்தின் இயக்குனர் Anjali Menon. இந்தப் படம் பற்றி விரிவாக எனது தளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்
HOW OLD ARE YOU
மஞ்சு வாரியரின் கம்-பேக் படம். நம்
ஜோதிகா நடித்துக்கொண்டிருக்கும் படம். ஹிந்தியில் கஜோல் நடிக்கப்போவதாகத் தெரிகிறது.
இந்தியாவில் திருமணமனமான பின்பு பெண்களின் கனவுகள் நசுக்கப்படுவதை முன்னிறுத்தி வெளிவந்த
அருமையான படம். படத்தின் இயக்குனர் Rosshan Andrrews. இந்தப் படம் பற்றிய எனது பார்வையையும்
ஏற்கனவே எழுதியுள்ளேன்.
OM SHANTI OSHANA
பூஜா மேத்யூ என்ற பெண்ணின் கதை. சொல்லப்போனால்
கதையென்று ஒன்றும் இந்தப் படத்தில் இல்லை. தான் விரும்பும் Mr. Perfect ஆன கிரி (நிவின்)
என்பவனுடன் எப்படிச் சேர்கிறாள் என்பது தான் கதை. படத்தில் வில்லன் கிடையாது, தம்-தண்ணி
காட்சிகள் கிடையாது. இவ்வளவு ஏன் நெகட்டிவ் சமாச்சாரங்கள் ஒன்று கூடக் கிடையாது. Light
Hearted, Romantic Comedy காட்சிகளால் படத்தை நிரப்பி நம்மையும் அதில் பயணிக்க வைக்கிறார்கள்.
பூஜாவாக நஸ்ரியா செம க்யூட். சில சேட்டைகள் ஓவராக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. “காட்டு
முல்லையோ” பாடல் எனது ஆல்-டைம்-பேவரிட். அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்களுள் ஒன்று.
படத்தின் இயக்குனர் Jude Anthany Joseph
APOTHECARY
படத்தைப் பார்க்க வைத்த நண்பன் ‘ஜெர்மனி’
விக்கிக்கு நன்றி. ரமணாவில் ஒரு ஹாஸ்பிடல் சீன் வரும். அதன் நீட்சி தான் இந்தப் படம்.
மல்டி-ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் என்ற போர்வையில் பணமுதலைகள் செய்யும் அட்டூழியங்கள்
தான் கதை. பணம் இல்லாத மனித உயிர்களை வெறும் ஆராய்ச்சிக்கூட எலிகளாக இந்த மருத்துவமனைகள்
நடத்தும் போக்கையும், அதனால் மனதளவில் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் ஒரு மருத்துவரைப்
பற்றிய படம். அதையே கொஞ்சம் Fantasy, Psychology, Philosophy எல்லாம் கலந்து மிஷ்கின்
அடிக்கடி சொல்லும் Redemption ல் கொண்டு வந்து முடிக்கிறார்கள். சுரேஷ் கோபிக்கு ஏற்ற
வேடம். வழக்கம்போல ஜெயசூர்யா பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பல நாட்களுக்குப் பிறகு
அபிராமியை இந்தப் படத்தில் பார்க்க முடிந்தது. நல்ல படம், பார்க்கவேண்டிய படம். படத்தின்
இயக்குனர் Madhav Ramadasan
1983
இந்தியாவில் கிரிக்கெட் பார்க்காத வெகு
சில அந்நிய ஜீவராசிகளில் நானும் ஒருவன். ஆனால் முழுக்க முழுக்க கிரிக்கெட் பற்றிய,
சச்சினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் எனக்கும் பிடித்திருந்தது.
பள்ளி செல்லும் மாணவனாக, இளைஞனாக, பத்து வயது சிறுவனுக்கு தந்தையாக என்று ஆல் ஏரியாவிலும்
நிவின் பாவ்லி பெர்பெக்ட். மிக அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். Joy Mathew, Srinda
Ashab, Nikki Galrani ஆகியோரும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிலான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
இந்தியன் கிரிக்கெட் டீம் பற்றிச் சொல்லும் இடங்கள் எதிலுமே தமிழகத்தின் கேப்டன் ‘தோனி’
பெயரை தெரியாத்தனமாகக்கூட உச்சரிக்கவில்லை. நிச்சயம் வேண்டுமென்றே விட்டுவிட்டார்கள்
என்று தான் தோன்றுகிறது. எனக்கு கிரிக்கெட் தெரியாது என்றாலும், தோனியின் சாதனைகளைப்
பற்றித் தெரியும். He deserves a mention…! படத்தின் இயக்குனர் Abrid Shine.
IYOBINTE PUSTHAKAM
விஷுவலாக
இந்த வருடம் நான் பார்த்த படங்களில் சிறந்தது இந்தப் படம் தான். Technically
Brilliant மற்றும் திறமையான நடிகர்கள் இருந்தும் திரைக்கதை கொஞ்சம் நொண்டியடித்ததால்
படத்தை ‘நல்ல படம்’ என்று முழுமையாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் நிச்சயம் ஒரு முறை
அவசியம் பார்க்க வேண்டிய படம். படத்தின் இயக்குனர் Amal Neerad. படம் பற்றிய எனது விமர்சனம்
MUNNARIYPPU
மம்மூட்டியின் மிகத் திறமையான நடிப்பில்
வெளிவந்த படம். சிம்பிளான ஒன்-லைன் அதை கொஞ்சம் நீளமாகச் சொல்லிவிட்டார்கள். கிளைமாக்ஸ்
தான் படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். அது புரியவில்லை / பிடிக்கவில்லை என்றால்
படத்தை நீங்கள் குப்பை என்பீர்கள். படத்தின் இயக்குனர் Venu Isc. படம் பற்றிய எனது
பார்வை
SAPTHAMASHREE THASKARAHA
ப்ரித்விராஜ் நடித்த படம். காமெடி கூட்டணி
ஒன்று பெரும் பணத்தைத் திருடுவது தான் கதை. முதல் பாதி அளவிற்கு இரண்டாம் பாதி ஈர்க்கவில்லை.
திருட்டுப் பிளானில் சுவாரஸ்யமும் இல்லை. ஆனாலும் ஒரு முறை பார்க்கலாம், சிரிக்கலாம்.
படத்தின் இயக்குனர் . படம் பற்றிய எனது விமர்சனம்
NJAAN
துல்கர் சல்மான் நடித்த படம்.
Period Film. சுதந்திரத்திற்கு முன்பான கேரளா தான் கதைக்களம். அதே காலகட்டத்தைக் களமாகக்
கொண்ட Iyobinte Pusthakam படத்திற்கும் இதற்கும் பெருவித்தியாசம் உண்டு. படம் கொஞ்சம்
ஸ்லோ தான் என்றாலும், ஒரு முறை பார்க்கலாம். படத்தின் இயக்குனர் Ranjith. படம் பற்றிய
எனது பார்வை
VIKRAMADITHYAN
இதுவும் துல்கர் சல்மான் நடித்த படம்
தான். எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இருவரைப் பற்றிய படம். அவர்காளுக்கு பொதுவான்
தோழியுடன் காதல் டிராக் படத்தின் சுவாரஸ்யங்களுள் ஒன்று. அனூப் மேனன், லேனா போன்ற திறமையான
நடிகர்கள் இருக்கும் படம். ஆனாலும் புதிதாக ஒன்றுமே இல்லை. ஒரு முறை பார்க்கலாம். படத்தின்
இயக்குனர் Lal Jose. படம் பற்றிய எனது பார்வை
இந்தப் பத்தைத் தவிர நான் பார்த்த படங்கள்,
7th Day, Mr. Fraud, Peruchazhi – மூன்றும் செம்ம மொக்கை. தவிர்ப்பது நல்லது.
இந்தப் படங்களைத் தவிர மிஸ் ஆன, பார்க்க வேண்டும் என்று
மற்றவர்கள் பரித்துரைத்து நான் செலெக்ட் செய்து வைத்திருக்கும் 10 படங்கள் –
1) Money
Ratnam
2) Vellimoonga
3) Bhaiyaa Bhaiyaa
4) Misayile Kuthira Meenukal
5) Ringmaster
6) Salalah
Mobiles
7) Swapaanam
8) God’s Own Country
9) 1 by Two.
10) Njaan Steve Lopez
இந்த லிஸ்டைத் தவிர வேறு ஏதாவது பார்க்க
வேண்டிய 2014 ஆம் ஆண்டு மலையாளப் படங்கள் இருந்தால் நண்பர்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...