சமீபமாக எனது உள்டப்பியில் (Inbox) நிறைய பேர் கேட்கும் கேட்கும் ஒரே கேள்வி - 'ப்ரோ இந்தப் படத்தோட லின்க் கிடைக்குமா?' என்பது தான். தமிழ் அல்லாத மற்ற மொழித் திரைப்படங்கள் முக்கியமாக உலக மொழித் திரைப்படங்களைக்
காண இணையத்தை விட்டால் நமக்கு வேறு வழி இல்லை
(இன்றைய தேதிக்கு).
ஆன்லைனில் பணம் கட்டிப் படங்கள் பார்க்கும் வசதி வந்துவிட்டாலும், சொற்பான படங்களையே அப்படி பார்க்க முடியும்.
Netflix (www.netflix.com/in) ஒரு நல்ல தொடக்கம்
என்றாலும், குறிப்பிட்ட சில ஆங்கில, இந்திய படங்கள்,
டி.வி சீரீஸ்கள் மட்டுமே Netflix இல் இப்போதைக்கு காணக்கிடைக்கிறது.
ஆனால் கொடுக்கிற காசிற்கு கியாரண்டி. Netflix பற்றி நான் எழுதிய பதிவு - https://goo.gl/uJ13YB
எல்லா ஊரிலும் உலகத் திரைப்படத்திருவிழாக்கள் நடப்பதில்லை. சென்னை தவிர எந்த ஊரிலும்
"பர்மா பஜார்" இல்லை. ஆக, தமிழ் அல்லாத திரைப்படங்களைக் காணும் உலக சினிமா தாகத்திற்கு
நானும் என்னைப் போலப் பலரும் சார்ந்திருப்பது இணையத்தையே.
இந்தத் தளத்தில் நான் எழுதும் தமிழ் அல்லாத படங்களைப் பெரும்பாலும்
இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்தே பார்த்திருக்கிறேன்.
பார்த்துவருகிறேன்.
இணையத்தில் இல்லாத படங்களே இல்லை. கொட்டிக்கிடக்கிறது.
சுலபமாக அடுத்தவரிடம்
'லின்க்' கேட்பதற்கு பதில், சிறிது முயற்சி செய்தால் ஐந்தே நிமிடத்தில் எந்த நாட்டுத் திரைப்படத்தையும்
கண்டுபிடித்துப் பார்த்துவிடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. அனுபவம். இருந்தாலும், நண்பர்கள் சிலர் கேட்டுவிட்டார்கள் என்பதால்
இந்தப் பதிவு அவசியமாகிறது.
இது தப்பான பதிவு
என்று நன்றாகத் தெரிகிறது. என்றாலும், அவசியமான
பதிவு என்பதால் பொதுநலன் கருதி எனக்குத்
தெரிந்ததை உங்களுக்கும் சொல்கிறேன்.
So, இணையத்தில் ஒரு படத்தைத்
தேடுவது எப்படி?
இல்லீகலாக பைரேட்டட்
படங்களைத் தேடுவது எப்படி என்று பார்க்கும் முன்,
இணையத்திலேயே லீகலாகப் படம் பார்க்க சில வசதிகள் உண்டு. அவற்றை முதலில் சொல்லிவிடுகிறேன்.
www.youtube.com
- YouTube தளத்திலேயே பெரும்பாலும் நமக்குத் தேவையான படம் கிடைத்துவிடும். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிப் படங்களின் (கொஞ்சம் பழைய படங்கள்),
ஒரிஜினல் வெர்ஷனே
YouTube இல் இலவசமாகக் காணக் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட கம்பெனியே லீகலாக,
இலவசமாக நாம் அவர்களது படத்தைக் காண வழிசெய்திருக்கிறார்கள். எந்த மொழிப்படமாக இருந்தாலும் முதலில் நான் தேடுவது Youtube இல் தான்.
YouTube
தவிர இந்திய மொழிப்படங்கள் லீகலாகக் காணக் கிடைக்கும் பிற
தளங்கள் கீழ் கண்டவாறு. இவை
அனைத்துமே Netflix போலப் பணம் கட்டிப் படம்
பார்க்கும் தளங்கள்.
www.hungama.com
- 12 இந்திய மொழிகளில் சுமார்
7000 படங்கள் இங்கு இருக்கிறது.
மாதம் ரூ.249 கட்டினால் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.
www.erosnow.com
- EROS தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட படங்கள் அனைத்துமே இங்கு
காணக் கிடைக்கிறது. படங்கள்
தவிர இந்திய (ஹிந்தி) டி.வி சீரியல்களையும் இலவசமாக இங்கு பார்க்கலாம்.
www.hotstar.com
- இதுவும் youTube போலத் தான். படங்கள், டிவி சீரியல்களை இலவசமாகப் பார்க்கலாம்.
இந்தத் தளங்களைத்
தவிர அமெரிக்கக் கம்பெனியான www.herotakies.com என்ற இணையதளம் விரைவில் இந்தியாவிற்கும் வரவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. HeroTalkies இந்தியாவிற்கு வந்தால் மாதத்தவணை கட்டித்
தரமான குவாலிட்டியில், டவுண்லோட்
செய்யும் அதே நெட் யூஸேஜில் ஆன்லைனில் லீகலாகப் படம் பார்க்கலாம். திருட்டு வி.சி.டி, திருட்டு டவுண்லோட் பிரச்சனைகளை இது பெருமளவில் குறைக்கும்.
Youtube
என்பது பெரும்பான்மை இணையவாசிகள் பயன்படுத்தும் Video Archive / Video Streaming இணையதளம். இன்னும் சில தளங்களும் உண்டு.
www.vimeo.com
- குறும்படங்கள் கொட்டிக்கிடக்கிறது இந்தத் தளத்தில். Private Sharing செய்ய சிறந்த தளம். HD தரத்தில் படங்களைத் தருவதில் இந்தத் தளத்தை அடித்துக்கொள்ள
முடியாது.
www.dailymotion.com
, www.metacafe.com - இந்த இரண்டு தளங்களுக்கும் YouTube ற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஆனால் YouTube இல் இல்லாத பல படங்கள் எனக்கு இந்தத் தளங்களில் கிடைத்திருக்கிறது.
www.veehd.com
- இந்தத் தளம் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும், பழைய படங்கள் குவிந்து கிடக்கிறது இங்கு. நீங்கள் தேடும் ஒரு குறிப்பிட்ட படம் இந்தத் தளத்தில் இல்லை
என்றால், இணையத்தில் வேறு எங்கும்
அந்தப் படம் கிடைப்பது கடினமே.
www.youku.com
- இது சீன YouTube தளம். சீன / ஹாங்காங் படங்கள்,
டி.வி சீரீஸ்களைக் காண சிறந்த தளம். ஆனால் மருந்திற்குக் கூட எங்கும் ஆங்கிலம் இருக்காது. டிரான்ஸ்லேட்டர் வசதியுடன் பட லின்க் களைத் தேடிப் பிடிக்க
வேண்டும். ஆனால் அப்படி நாம் தேடிப்
பிடிக்கும் படம் பெருமாலும் ஆங்கில சப்டைட்டில் கொண்டதாகவே இருக்கும். இங்கிருக்கும் படங்கள் பெருமாலும் YouTube லேயே கிடைத்துவிடும் என்பதால் பாதகமில்லை.
www.goasiantv.com
- நான் கண்டுபிடித்த அருமையான வெப்சைட்களில் முக்கியமானது இந்தத்
தளம். ஆசியப்படங்கள் விரும்பிப்பார்ப்பவர்களுக்கு
இந்தத் தளம் ஒரு அட்சயப்பாத்திரம். அருமையான குவாலிட்டியில், ஏற்றுக்கொள்ளும்படியான ஆங்கில சப்டைட்டில்களுடன் கொரிய, சீன, ஜப்பானியப் படங்கள், டிவிசீரீஸ்களை முந்தித் தரும் ஸ்ட்ரீமிங் தளம்.
Google Chrome இல் Add-On ஆக வரும் FlashVideo Downloader அல்லது IDM (Internet Download Manager) போன்றவற்றைப் பயன்படுத்தி
இந்தத் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் வீடியோவைச் சுலபமாக டவுண்லோடும் செய்து கொள்ளலாம்.
இவை தவிர இன்னும்
நிறைய நிறைய தளங்கள் உண்டு. நான் பயன்படுத்துவது பெரும்பாலும் இந்தத் தளங்களையே.
அடுத்து வருவது நீங்கள்
ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் டாரெண்ட் தளங்கள்.
டாரெண்ட்கள் எப்படி இயங்குகின்றன, அதன் வரலாறு என்ன, டாரெண்ட்களில் திருட்டுத் தனமாகப் படங்களை அப்லோட் செய்வதால் நமக்கு அல்லது இந்த வேலையைச் செய்பவர்களுக்கு, அந்தக் குறிப்பிட்டத் தளங்களுக்கு என்ன லாபம் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத சமாச்சாரங்கள். எங்கு என்ன கிடைக்கும் என்பதை மட்டும் சொல்கிறேன்.
டாரெண்ட்கள் எப்படி இயங்குகின்றன, அதன் வரலாறு என்ன, டாரெண்ட்களில் திருட்டுத் தனமாகப் படங்களை அப்லோட் செய்வதால் நமக்கு அல்லது இந்த வேலையைச் செய்பவர்களுக்கு, அந்தக் குறிப்பிட்டத் தளங்களுக்கு என்ன லாபம் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத சமாச்சாரங்கள். எங்கு என்ன கிடைக்கும் என்பதை மட்டும் சொல்கிறேன்.
Kickass
Torrents (www.kat.how) - சென்ற மாதம் வரை இணைய உலகில் நம்பர் ஒன் டாரெண்ட்ஸ் வெப்சைட் (Torrent Search Engine). ரூல்ஸ் என்ற பெயரில் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பல முறை பிளாக் செய்யப்பட்டாலும்
மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வருவது கிக்ஆ-ஸிற்கு புதிதல்ல. முன்னோடிகாளான
www.thepiratebay.com , www.isohunt.com போன்ற ராட்சஸர்களையே
தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்ட, அழிக்கவே முடியாத சிட்டி ரோபோ இந்தக் கிக்-ஆஸ். ஆனால் இந்த முறை மொத்தமாகத் தடைசெய்யதுவிட்டார்கள் என்பதால், இந்தத் தளத்தின் 'மிரர்' தளங்கள் - அதாவது இந்தத் தளத்தில் இருந்த தகவல்களை அப்படியே அச்செடுத்து இயங்கிவரும் தளங்கள் மட்டுமே இப்போது இயங்கிவருகிறது. புதிய வரவுகள் இருக்காதே தவிர கிக்-ஆஸின் பழைய டேட்டா-பேஸை அப்படியே நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்
ExtraTorrent
(http://extra.to/) - Kickass ற்கு சிறிதும் குறைச்சல் இல்லாத ஒரு தளம் எக்ஸ்ட்ரா டாரெண்ட். இன்றைய தேதிக்கு எனது அத்தனை டவுன்லோட்களையும் இந்தத் தளத்திலிருந்து தான் செய்துவருகிறேன்.
Torrentz (https://torrentz2.eu/) இணையத்தில் நீங்கள் தேடும் படத்தின் டாரெண்ட் லின்க் எங்கிருந்தாலும், தேடிக்கண்டுபிடித்து லிஸ்ட் கொடுத்துவிடும் இந்தத் Torrentz தளம். Kickass உடன் சேர்ந்து இதையும் தடை செய்திருந்தார்கள். பட், ஒரே வாரத்தில் மீண்டும் தனது சேவையைத் தொடங்கிவிட்டது. Search Engine களுக்கெல்லாம் ஒரு Search Engine.
ஒரு படத்திற்கான
டவுண்லோட் லின்க்'ஐ Kickass, Torrentz, Piratebay போன்ற Torrent Search Engine தளங்கள், தனியாக இயங்கும்
(சொந்தமாக படங்களை
Rip செய்யும் தளங்கள்)
பிற டாரெண்ட் தளங்களில் இருந்து தேடி நமக்குக் கொடுக்கும். நமக்கு வேண்டிய தரத்தில்,
வேண்டிய சைஸில் இருக்கும் ஃபைல்களை, வேண்டிய ரிப்பரது லிங்கிலிருந்து Mu Torrent (http://ll.www.utorrent.com/intl/en/) அல்லது
BitTorrent (http://www.bittorrent.com/) போன்ற சாப்ட்வேர் மூலம் நாம் டவுண்லோட் செய்து கொள்ளலாம்
அல்லது நேரடியாக இந்த ரிப்பர்களது (Rippers / Encoders
/ Uploaders) தளங்களுக்கே போய் டவுண்லோட் செய்யலாம். நான் கண்டவரை தற்போதுள்ள அருமையான ரிப்பர்ஸ் இவை.
www.mkvcage.com
- மிகக் குறைந்த சைஸில்,
அதிகப்படியான தரத்தில்,
மற்ற தளங்களில் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னமே படங்களை முந்தித்
தரும் தளம் இது. படத்தைப் பற்றிய அனைத்துத்
தகவல்களுடன் சாம்பிள் ஸ்கிரீன்ஷாட் உம் இந்தத் தளத்தில் இருப்பது இந்தத் தளத்தின் பலம். கூடவே எந்தப் படமாக இருந்தாலும் ஆங்கில சப்டைட்டில் இல்லாமல்
இவர்கள் வெளியிட மாட்டார்கள் என்பது கூடுதல் தகவல்.
www.shaanig.org - MKVCage ற்கு அடுத்தபடியாக தரத்திலும்,
சைஸிலும் பிரம்மிக்கவைக்கும் தளம் Shaanig. Highest Quality at Smallest Size என்பது
தான் இவர்களது டேக் லைன். மிகப்பிரபலமான இந்தத் தளம் இணையவாசிகளின் பேவரிட்.
ஆனால் என்ன ஒரு குறை அநியாயத்திற்கு கம்ப்ரஸ் செய்யப்படுவதால்
வீடியோ நன்றாக இருந்தாலும் ஆடியோ நன்றாக இருக்காது.
சில சமயம் வீடியோவும் மக்கர் பண்ணும். லேப்டாப் இல் படம் பார்ப்பவர்களுக்கு Shaanig சிறந்த இடம். ஆங்கில சப்டைட்டில் கண்டிப்பாக இருக்கும்.
www.yts.ag
- டாரெண்ட் உபயோகித்து ஆங்கிலப்படம் டவுண்லோடுபவர்களுக்கு Yify என்ற சொல் புதிதல்ல.
திடீரென்று ஒரு நாள்
Yify அபீஸியலாக மூடப்படுகிறது என்ற செய்தி வெளியாக, நானெல்லாம் மனதுடைந்து போனேன்.
ஆனால் மறுநாளே புதுபெயரில்,
புது சர்வரில், புதிதாகப் பிறந்து வந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது Yify.
www.ganool.ph - சிறந்த உலகமொழித் திரைப்படங்கள், முக்கியமாக கொரியப் படங்கள் இவர்களது ஸ்பெஷாலிட்டி.
www.ganool.ph - சிறந்த உலகமொழித் திரைப்படங்கள், முக்கியமாக கொரியப் படங்கள் இவர்களது ஸ்பெஷாலிட்டி.
தனியாக வெப்சைட்
இல்லாத, ஆனால் மேல்சொன்ன ரிப்பர்களுக்கு
சற்றும் குறையாத குவாலிட்டியில் படங்களைக் கொடுக்கும் சில ரிப்பர்கள் உண்டு. Kickass தளத்தின் Search பாக்ஸில் இந்தப் பெயர்களை தட்டி என்னென்ன படங்கள் உள்ளது என்று பார்க்கலாம்.
Sujaidr
- ஆங்கிலப்படங்களை மிகக்குறைந்த சைஸில், மிக அருமையான குவாலிட்டியில் சிறந்த படங்களை ரிப் செய்யும்
குழு இவர்கள். தற்போது தமிழ் படங்களையும் அப்லோட் செய்கிறார்கள்.
Hon3y
- ஹிந்தி படங்களை செம்ம குவாலிட்டியில் ஆங்கில சப்டைட்டிலுடன்
கொடுப்பவர்கள்.
AnoXmous
- இவர்களும் தற்போது ஆட்டத்தில் இல்லை என்றாலும் (அவ்வபோது ஒன்றிரண்டு நல்ல படங்களை அப்லோடுகிறார்கள்), இவர்களது பழைய டேட்டாபேஸ் அப்படியே தான் உள்ளது.
சிறந்த உலகப் படங்களை பல கொட்டிக்கிடக்கிறது இவர்கள் வசம். தரத்தில் சிறிதும் காம்ப்ரமைஸ் ஆகாமல் நல்ல பெயர் எடுத்திருந்த
வெகுசில ரிப்பர்ஸ் குழுவில் ஒன்று.
aXXo
- டாரெண்ட் ரசிகர்களால் மறக்க முடியாத லெஹண்ட். வெறும் 700 MBக்கு தரம் குறையாமல் படங்களை ரிப் செய்து கொடுத்த முதல் ஆள். இப்போது என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
மேல்சொன்னவை அனைத்தும்
பெரும்பாலும் திரைப்படங்களுக்கான தளங்கள்.
ஆங்கில டி.வி சீரீஸ்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கும் ரிப்பர்ஸ் இருவரே. RARBG and EZTV.
PublicHD
- கம்மென்று இருக்கும் மற்றுமொரு பிரபல ரிப்பர். BluRay வை சைஸ் குறைக்காமல் அப்படியே அப்லோட் செய்பவர்கள். ஒரு படத்தின் குறைந்தபட்ச சைஸ்
15 GB ஆகவும் அதிகமாக
45 GB வரையும் இருக்கும்.
ஒரு வருடமாக இவர்கள் செயல்படவில்லை.
www.tamilrockers.mx - தமிழ் படங்களுக்கென்று பிரத்யேகமாக, வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே இல்லீகல் டாரெண்ட்
தளம் இந்த TamilRockers தான். யார் இவர்கள், எந்த நாட்டிலிருந்து இந்தத் தளம் இயங்குகிறது என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத
சிதம்பர ரகசியம். கடந்த ஒரு வாரமாக இந்தத்
தளத்தை 'இந்திய அரசாங்கம்' தடை செய்திருக்கிறது.
ஆனால் வெகு சீக்கிரம் வேறு ஒரு சர்வரில் இருந்து இந்தத் தளம்
இயங்கத் தொடங்கிவிடும். தடை
இந்தியாவிற்கு மட்டும் தான் என்பதையும் அறிக.
இதற்கு மேல் சொல்வதற்கு
ஒன்றுமே இல்லை. Seeds கம்மியாக உள்ளது, வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை,
நான் தேடும் படம் எங்குமே கிடைக்கவில்லை போன்ற கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை. மேல்
சொன்ன படங்களில் நீங்கள் தேடும் படம் இல்லை என்றால்,
அந்தப் படம் இணையத்தில் இல்லை என்பதை மனதில் ஃபிக்ஸ் செய்து
கொள்ளுங்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும்
அந்தப் படம் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது
:)
பி.கு: இந்த பதிவு சரியா தவறா என்ற எந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை. நீங்க கேட்டீங்க,
நான் கொடுத்துட்டேன்.
அவ்வளவுதான்.