2015 எதிர்பார்பிற்குரிய படங்கள் - The Complete List

8:04:00 AM

சென்ற ஆண்டு வெளியான படங்களில் நான் சிறந்தவை என்று நினைக்கும் லிஸ்டைப்பார்க்கும் முன், இந்தப் புது ஆண்டில் என்னென்ன படங்கள் வெளியாகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை பார்த்துவிடுவோம். 2014 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மிகச் சுமாரான ஆண்டும் தான். 2015 நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நம்புவோம்.

 
ஷங்கர் – விக்ரம் – ஏ.ஆர்.ரஹ்மான் – பி.சி.ஸ்ரீராம் – இந்தக் கூட்டணியில் ஒரு படம் தோற்பதற்கு வாய்ப்பே இல்லை. பொங்கல் போட்டியிலிருந்து ஒரு படம் வெளியேறிவிட்ட காரணத்தினால் கட்டாயம் அதிகத் திரையரங்குகளில் வெளியாகி படம் பெருவெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. முதல் நாள் முதல் காட்சி உறுதி. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் இந்தப் படம் அமைய வேண்டுமென்பது எனது பெர்சனல் விருப்பம்.


மகாபலி
மூன்று வருடங்களாக S S ராஜமலி எடுத்துக்கொண்டிருக்கும் சரித்திரப் படம். படத்தின் ஸ்டில்களும் மேக்கிங் காட்சிகளுமே மிரட்டுகிறது. டிரைலர் மட்டும் வெளியாகிவிட்டால் போதும் ஊரெங்கும் ‘பாகுபலி/மகாபலி’ பேச்சாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் நாள் முதல் காட்சி தவிர இன்னும் பல காட்சிகள் பார்க்கப் போவது நிச்சயம். ‘ஐ’ மேல் கூடச் சின்ன சந்தேகம் இருக்கிறது. ஆனால் ‘பாகுபலி’க்கு நான் கியாரண்டி. இரண்டு பாகமாக படம் வெளியாகிறது. முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 17 என்று அறிவித்திருக்கிறார்கள்.

மேக்கிங் வீடியோ - https://www.youtube.com/watch?v=3p_R7K13-Fs 

என்னை அறிந்தால் 
‘ஐ’க்குப் பிறகு நான் பெரிதும் எதிர்பார்க்கும் படம். காரணம் கௌதம் மேனன். அஜித் தனது ரசிகர்களை மட்டும் திருப்திபடுத்தினால் போதும் என்ற வகையில் சமீபகாலமாக நடித்த எந்தப் படமும் என்னைக் கவரவில்லை. ஆனால் கௌதம் மேனன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அஜித் ரசிகர்களுக்கும் திருப்தி என்னைப் போன்ற சாதாரண சினிமா ரசிகனுக்கும் கியாரண்டி என்று இன்று வெளியான டிரைலர் சொல்கிறது. ரிலீஸ் தேதி ஜனவர் 29 என்று சொல்லியிருக்கிறார்கள்.


தாரை தப்பட்டை
பாலாவின் படம் – இது ஒன்றே போதும் படத்தை எதிர்பார்க்க. ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் நிச்ச்யம் 2015 ஆம் ஆண்டு வெளியாகிவிடும் என்றே தெரிகிறது.

விஸ்வரூபம் 2 / உத்தம வில்லன் / பாபநாசம்

மூன்று படங்களுமே 2015 முதல் பாதியிலேயே வெளியிடும்படி தயாராக இருப்பதாகவே தெரிகிறது. விஸ்வரூபம் வெளியான சமயத்தில் தியேட்டர்காரர்களுக்கும் கமல்ஹாசனுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளின் தொடர்ச்சியாக இந்த மூன்று படங்களும் வெளியாவதிலும் சிக்கல் இருப்பதாக பத்திரிக்கைகள் சொல்கின்றன. அவற்றையெல்லாம் பக்காவாக கிளியர் செய்து மூன்றையும் அடுதடுத்து வெளியிட்டு 2015 ஆம் ஆண்டின் வெற்றி நாயகனாக கமல் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அடுத்து ‘திப்பு சுல்தான்’ காத்துக்கொண்டிருக்கிறது. ‘மருதநாயகம்’ வேறு தூசித் தட்டப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

அனேகன்
மாற்றான் என்ற ஒரு நல்ல முயற்சிக்குப் பிறகு கே.வி.ஆனந்த் பார்த்து பார்த்து செதுக்கிக்கொண்டிருக்கும் படம். தனுஷிற்கு மூன்று கெட்டப் என்று தெரிகிறது. ஊரெல்லாம் டங்காமாரி தான் கத்திக்கொண்டிருக்கிறது. நிச்சயம் மாற்றானை விட திருப்திகரமாக இருக்கும் என்று நம்புவோம்.


எனக்குள் ஒருவன்
கன்னட லூசியாவின் ரீமேக்கான இதை சித்தார்த்தின் மிகமோசமான மேக்கப்பையும் மீறி நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். கதை அப்படி. பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துவிட்டன. வெளியான ஒரு டீசரும் “ஒரிஜினலுக்கு துரோகம் செய்யவில்லை” என்று சத்தியமிடுகிறது.


ஆரஞ்சு மிட்டாய்
48 மணிநேரத்தில் நடக்கும் கதை என்பதாலேயே இந்தப் படத்தை நான் எதிர்ப்பார்க்கிறேன். வெறும் மூன்றே கதாப்பாத்திரங்கள், அதில் ஒருவர் விஜய் சேதுபதி. அவரது கெட்டப் அசத்துகிறது. விஜய் சேதுபதியே படத்தைத் தயாரிக்கிறார் என்பதால் படம் நல்ல படமாக இருக்கும் என்று நம்பலாம்.


இசை
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் படம். இசையமைப்பாளராக வெற்றிபெற்றுவிட்டார். டிரைலரும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக சத்யராஜின் பழைய வில்லன் நடிப்பு. கோணங்கித்தனங்கள் இல்லாமல் கொஞ்சம் சீரியஸான படமாக ‘இசை’ இருக்கும் என்று நம்புகிறேன். மார்ச்சிற்குள் படம் வெளியாகி விடும் என்றே தெரிகிறது.


வை ராஜா வை
‘கேசினோ’ கதை என்பதாலே இந்தப் படத்தை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். டிரைலர் அற்புதம், முக்கியமாக தனுஷ் Cameo. 2014 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு ஐஸ்வர்யா தனுஷின் முதல் படமான '3' எவ்வளவோ தேவலாம் என்பதும் ஒரு காரணம். ரிலீஸ் தேதி தெரியவில்லை. 


விசாரணை
இரண்டு போஸ்டர்கள் தான் தற்சமயத்திற்கு வெளியாகி இருக்கிறது. ஆனாலும் வெற்றிமாறன் என்ற பெயரால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. மாமூல் சினிமா போல இரண்டரை மணிநேரம் ஓடும்படமாக இல்லாமல் ஒன்றரை மணிநேரத்திற்கும் குறைவாக ஓடும் படமாக வெற்றிமாறன் இதை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று செய்திகள் சொல்கின்றன. ரிலீஸ் தேதி தெரியவில்லை. நிச்சயம் நல்ல படமாக இருக்கும் என்று நம்பலாம்.

புறம்போக்கு
மறைமுகமாக இல்லாமல் வெளிப்படையாகவே தன் படங்களில் கம்யூனிஸத்தையும் சர்வதேச அரசியலையும் தொடர்ந்து பேசி வருகிறார் இயக்குனர் ஜனநாதன். என்ன ஒரு சிறு பிரச்சனை படத்தின் கதை இரண்டாம் பாதியில் தான் தொடங்கும், முதல் பாதி முழுக்க தேவையில்லாத காட்சிகள் நம் பொறுமையைச் சோதிக்கும். தனக்கு இசையறிவு சுத்தமாக இல்லை என்பதைக் கூட ஒரு பேட்டியில் ஒத்துக்கொண்டிருக்கிறார். இவற்றை மட்டும் இந்தப் படத்தில் சரி செய்திருந்தாலே போதும், இந்த வருடத்தின் சிறந்த, முக்கியமான படமாக புறம்போக்கு இருக்கும் என்று நம்பலாம். டிரைலரும் அதையே தான் சொல்கிறது.


ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை

இயக்குனர் சேரன் தனது C2H மூலம் வெளியிடும் முதல் படம். அந்த முயற்சிக்காகவே படம் பெருவெற்றி பெற வேண்டும். முந்தைய சில படங்களின் மூலம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது சேரனுக்கு நிச்சயம் விளங்கியிருக்கும். நிச்சயம் இம்முறையும் தனது ரசிகர்களை ஏமாற்றமாட்டார் என்று நம்புவோம். ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஒரிஜினல் 5.1 டிவிடியாக வெறும் 50 ரூபாய்க்கு கிடைக்கும். தமிழ் சினிமா மேல் கொஞ்சமேனும் அக்கரை இருக்கும் ரசிகர்கள் அவசியம் ஒரிஜினலை வாங்கிப் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்.


ஜே.கே தவிர C2H மூலம் அடுத்தடுத்து நடிகை ரோகினி இயக்கியிருக்கும் ‘அப்பாவின் மீசை’, ஜெய் நடிப்பில் Parthy Bhaskar என்பவர் இயக்கியிருக்கும் ‘அர்ஜுனனின் காதலி’ ஆகிய படங்கள் வெளியாகிறது.

கொம்பன்
இயக்குனர் முத்தையாவின் 'குட்டிப்புலி' என்னை ஈர்க்கவில்லை. ஆனால் பருத்திவீரன் பார்ட் 2 போல இருக்கும் 'கொம்பன்' படத்தின் ஸ்டில்கள் வெகுவாக ஈர்க்கிறது. படம் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. பொங்களுக்கே படம் வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் ஒர் சேதியுமில்லை. டிரைலர் வந்தால் மேலும் ஏதாவது சொல்லலாம்.

காக்கிச்சட்டை
சிரிப்புப் போலீஸாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படம். எதிர்நீச்சல் என்ற சுமாரான ஆனால் வெற்றிப் படத்தைக் கொடுத்த துரை செந்தில்குமார் இயக்கும் படம். Motion Poster ஒன்றும் சில working stillsகளும் வெளியாகியிருக்கிறது. இந்தக் கதாப்பாத்திரத்திற்காக சினாகானா கொஞ்சம் உடலை ட்ரிம் ஆக்கியிருப்பது தெரிகிறது. போலீஸைக் கேவலப்படுத்தாமல் ரசிக்கக்கூடியப் படமாக இருக்கும் என்று நம்பலாம்.

இறுதிச் சுற்று
சத்தமில்லாமல் வெளியான ஒரு டிரைலரால் மிகுந்த எதிர்பார்பிற்குரியதாகி விட்டது மாதவன் நடிக்கும் இந்தப் படம். Sudha Kongara என்பவர் இயக்குகிறார் தனது உடலை இரும்பாக்கி மாதவன் பாக்ஸிங் கோச்சாக நடிக்கும் இந்தப் படம் தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது.


இடம் பொருள் ஏவல்
சீனு ராமசாமியின் படம். சிறந்த படம் இல்லையென்றாலும் தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பரவை இரண்டுமே நிச்சயம் நல்ல படங்கள். அந்த வகையில் இடம் பொருள் ஏவலையும் நான் நன்றாக அந்தப் படங்களை விடச் சிறப்பாக இருக்க வேண்டுமென்று எதிர்பாக்கிறேன். மீண்டும் புதிதாய்த் திரும்பியிருக்கும் யுவனின் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.

வலியவன்
‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் ஜெய் – ஆண்ட்ரியா நடித்திருக்கும் படம். டீஸர் வெளியாகி விட்டது. அதில் ஜெய் காட்டும் 6 பேக் மிரட்டுகிறது. ‘இவன் வேற மாதிரி’ படத்தைவிடக் கொஞ்சம் நன்றாக இருந்தால் கூட எனக்குப் போதும்.


யாகாவாராயினும் நாகாக்க
‘ஈரம்’ ஆதி நடித்திருக்கும் படம். டிரைலர் ஒரு வித்தியாசமான கதை இது என்று சொல்கிறது. ரிலீஸ் தகவல் இல்லை.


மாரி
தனுஷ் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கும் படம். தனுஷின் கெட்டப் கொஞ்சம் சந்தேகத்தை வரவழைத்தாலும் இயக்குனரை நம்பலாம். படம் இந்த வருடமே வெளியாகிவிடும் என்றே தெரிகிறது.

ராஜதந்திரம்
கடைசியாக புதுமையான டீஸர்கள் + ஒரு சுவாரஸ்யமான டிரைலர் மூலம் கவனம் ஈர்த்த ராஜதந்திரம். படத்தை இயக்கியிருப்பவர் அமித். 'நடுநிசி நாய்கள்' வீர பாகு, ரெஜினா, இளவரசு நடித்துள்ளனர்

டிரைலர் – https://www.youtube.com/watch?v=NlI3H_udS6w

********************************************************************

இந்தப் படங்களைத் தவிர இப்போதைக்கும் தொடக்க நிலையிலேயே இருக்கும் சில படங்களும் 2015 ஆம் ஆண்டு வெளியாகும் வாய்ப்பிருக்கிறது. அவற்றில் நான் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள்

மாரீசன்

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம். சரித்திரப்படம் என்றும் தெரிகிறது. ‘மயிலு’ ஸ்ரீதேவி, ‘கிச்சா’ சுதீப், ஹன்சிகா என்று பக்கா டீமுடன் படப்பிடிப்பு நடந்துகொண்டிருப்பது தெரிகிறது. கொஞ்சம் பெரிய படமென்பதால் 2015 ஆம் ஆண்டே ரிலீஸ் ஆகுமா அல்லது டிலே ஆகுமா என்று தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் எதிர்பார்ப்பு டாப்பில் இருக்கிறது.

இறைவி

இப்பொழுது தான் ப்ரீ-புரொடக்ஷன் நடந்து கொண்டிருக்கிறது. ஆடிசனுக்கு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டே படம் வெளியாகிவிட்டால் நமக்குக் கொண்டாட்டம் தான்.

ஒரு பக்க கதை

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி தரணிதரன் தொடங்கியிருக்கும் அடுத்த படம். ஹீரோவாக ஜெயராமின் மகன் அறிமுகமாகிறார். பூஜை மட்டும் தான் போட்டிருக்கிறார்கள். இந்த வருடமே வெளியாகும் என்று நம்பலாம்.

மாஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பேய் படம். ஒரு போஸ்டரை மட்டும் தான் விட்டிருக்கிறார்கள். மற்றபடி வேறு செய்தி இல்லை. ஆனால் நச்சயம் 2015 ஆம் ஆண்டு படம் வெளியாகிவிடும் வாய்ப்புகள் அதிகம்.
இந்தப் படங்களைத் தவிர இயக்குனர் பாலாஜி சக்திவேல் தொடங்கியிருக்கும் ‘ரா ரா ராஜசேகர்’, வெற்றிமாறன் தனுஷ் – பார்த்திபனை வைத்து இயக்கவிருக்கும் ‘சூதாடி’, ராதா மோகன் தொடங்கியிருக்கும் ‘உப்புக் கருவாடு’, பா.விஜய் விக்ரம் பிரபுவை வைத்து இயக்கவிருக்கும் ‘இது என்ன மாயம்’ சுசீந்திரன் இயக்கிக்கொண்டிருக்கும் ‘நேருக்கு நேர்’, சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படம் என்று நிறைய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. சரியான தகவல்கள் இல்லாததால் இந்தப் படங்களைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

இவை தவிர தங்கர்பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’, ராமின் ‘தரமணி’, பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’, விஜய் மில்டனின் ‘பத்து எண்றதுக்குள்ள’, ஆரோக்கியதாஸ் என்பவர் இயக்கத்தில் கவுண்டர் நடிக்கும் ‘49ஓ’, ஜெயம் ரவி த்ரிஷா நடிப்பில் கல்யாணகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கும் ‘பூலோகம்’ கேபிள் சங்கரின் ‘தொட்டால் தொடரும்’, விஷ்ணுவர்தனின் ‘யாட்சன்’, ராம் பிரகாஷின் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, சத்யசிவாவுன் ‘சிவப்பு’, லக்ஷ்மணனின் ‘ரோமியோ ஜீலியட்’, லாரன்ஸின் ‘முனி 3: கங்கா’, ஜீ.வி.பிரகாஷ் நடிக அவதாரம் எடுத்திருக்கும் ‘டார்லிங்’, ‘பென்சில்’ ஆகிய படங்களும் இந்த வருடம் வெளியாக வாய்ப்புள்ளது.

மேல் சொன்ன படங்களையெல்லாம் தவிர்த்து நான் அதிகம் எதிர்பார்க்கும் ஆனால் எப்போதும் வெளியாகும் என்ற தகவலே இல்லாத ஒரு படம் ‘காக்கா முட்டை’ 
இயக்குனர் மணிகண்டன் இயக்கி, தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இந்தப் படத்தைப் பற்றி பல நாட்களாக பலர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறாகள். Toronto International Film Festival இல் முதல் முறையாகத் திரையிடப்பட்ட இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் இரண்டு மூன்று போஸ்டர்கள் தவிர படம் சம்பந்தமாக எதையுமே வெளியிடவில்லை. மேலும் பல திரைப்படவிழாக்களில் சுற்றிவிட்டு கடைசியாகத் தான் திரையரங்குகளுக்கு வரும் என்று நினைக்கிறேன்.

மேல் சொன்ன படங்களைத் தவிர வேறு சில படங்களும் காமெடி, காதல், மசாலா, பேய் என்று இந்த ஆண்டு வெளியாகும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை குப்பையாகத் தான் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதால் அவற்றை நான் எதிர்பார்க்கவில்லை. நன்றாக இருந்தால் மகிழ்ச்சிதான்.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...