2013 படங்கள் - ஒரு பார்வை 01 - தெலுங்கு

11:28:00 AM

2013 ஆம் ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம். சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிக படங்கள் பார்த்திருக்கிறேன். மரபு மாறாமல் இந்த வருடத்தின் டாப் 10, வொர்ஸ்ட் 10, சுமார் 10 படங்களைப் பட்டியலிடும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆனால் தரவரிசையெல்லாம் தமிழ் படங்களுக்கு மட்டும் தான். எனவே அவற்றை இறுதியில் பார்க்கலாம். தமிழ் அல்லாத வேற்று மொழிப் படங்களைப் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். இதற்கு 1, 2, 3 என்ற வரிசையெல்லாம் கிடையாது. பார்த்த படங்கள் எப்படி - அதை மட்டும் தான் சொல்லப் போகிறேன்.

முதலில் தெலுங்கு

இந்த வருடம் எந்த தெலுங்கு படத்தையும் நான் தியேட்டரில் பார்க்கவில்லை. ஒரிஜினல் டி.வி.டியும் வாங்கவில்லை.

சென்ற வருடத்தை வைத்துப் பார்க்கும் பொழுது இந்த வருடம் தெலுங்கு சினிமா கொஞ்சம் டல் தான். பெரிய ஸ்டார்களின் படங்கள் பல வந்தாலும் ரசிகர்களுக்கு திருப்தி + பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்ற நிஜ சக்ஸஸ் காம்பினேஷன் குறைவு தான். என்னைக் கேட்டால் இந்த இரண்டையும் ஒரு சேரக் கொடுத்து ரசிகர்களையும் தயாரிப்பாளர்கள் கல்லாவையும் திக்குமுக்காட வைத்த ஒரே படம், ATHARINTIKI DAAREDI. ஒரிஜினல் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அடித்து தூள் கிளப்பிய படம். இத்தனைக்கும் சென்ற வருட Gabbar Singh, Cameraman Ganga Tho Rambabu போல ஆக்ஷன் படம் கூட அல்ல. பக்கா ஃபேமிலி டிராமா. ஆனாலும் படம் திருட்டுத்தனமாக இணையைத்தில் வெளியாகியும் வசூல் குறையாமல் மொத்த ஆந்திராவையும் கலக்கியுள்ளது. 60 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் வசூலித்தது 190 கோடி!

பவருக்கு அடுத்தபடியாக இருப்பது ஆந்திரா டார்லிங், பிரபாஸ். இவரது MIRCHI சாதாரண இரு குடும்ப பிரச்சனை + லாலேலாலலலாலா கிளைமாக்ஸ் கதைதான். ஆனாலும் மேக்கிங் + மசாலா வகையறா + பிரபாஸின் பிரசன்ஸ் கொஞ்சம் நன்றாக இருந்ததால் ஒரு ரவுண்ட் வந்துவிட்டது. படத்தில் நம் சத்யராஜ் - நதியா ஜோடியும் உண்டு (சின்ன தம்பி பெரிய தம்பி). சாதாரண படம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாகப் பார்த்தால், பிடிக்கலாம்.

"இந்த மேரி மாஸ்லாம் நா பாத்ததே கெடையாது, செம்ம செம்ம செம்ம" என்று ஆந்திராவே உணர்ச்சி வசப்பட்ட ஜீனியர் NTR நடித்த BAADSHAH படம் "அப்படி ஒன்னும் புதுசா இல்லையே" என்ற எஃபெக்டை தான் கொடுத்தது. பார்த்து பார்த்து சலித்துப் போன, இரண்டாம் பாதியில் தான் ஹீரோ எவ்வளவு பெரிய பருப்பு என்று தெரிய வரும் கதை. கிளைமாக்ஸில் ஒரு பயங்கர டுவிஸ்ட் - ஜூனியர் NTR ஒரு போலீஸ் உயர் அதிகாரி; பேரு NTR! வாவ்!!

விக்டரி வெங்கடேஷ் + பிரின்ஸ் மகேஷ் பாபு இணைந்து நடித்த மற்றுமொரு லாலேலாலலலாலா படம் SEETHAMMA VAKITLO SIRIMALLE CHETTU. பயங்கர நல்ல அப்பா, அவருக்கு அதைவிட பயங்கர நல்ல இரண்டு மகன்கள், ஒரு மனைவி, ஒரு மகள் பிறகு வீட்டிலேயே வளரும் உறவுக்காரப் பெண். படத்துல பிரகாஷ்ராஜ் தான் அந்த நல்ல அப்பா. பிளிய பிளிய நடித்திருக்கிறார். யாருக்காக இல்லையென்றாலும் நம் அஞ்சலிக்காகவாவது இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். சமந்தாவை பீட் செய்து அஞ்சலி அழகாகத் தெரிந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சத்திய விக்ரமன் சப்ஜெக்ட். சுமாராக இருந்தது.

சென்ற வருடம் இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்து அசத்திய பூரி ஜெகன்னாத்தின் படம், IDDARAMMAYILATHO. அல்லு அர்ஜுன் ஹீரோ. வழக்கம்போல் செம்ம ஸ்டைல் டான்ஸ், பைட்ஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்காகவெல்லாம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. லட்டு மாதிரி இரண்டு ஹீரோயின்கள் - அமலா பால் + கேத்தரின் தெரேஸா. இரண்டாமானவர் நம் மனதைக் கொள்ளை கொள்வார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மற்றபடி படத்தில் ஒன்றும் பெரிதாக இல்லை.

ஸ்டார் இயக்குனர் வி.வி.நாயக் எடுத்த படம் NAAYAK. ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடித்த படம். டபுள் ரோல் வேறு. காஜல் - அமலா பால் என்று இரண்டு ஹாட் ஹீரோயின்கள். ஆனால் இது போன்ற ஒரு சப்பை டபுள் ஹீரோ கதையை நான் பார்த்ததில்லை. மிகவும் சாதாரணமாக, சுமாராக இருந்தது படம். முதல் பாதி பரவாயில்லை. அதிலும் அந்த பர்ஸ்ட் பைட் மட்டும் தான்.

சென்ற வருடம் என்னை அசத்திய 'இஷ்க்' ஸ்டார் கூட்டணியான நிதின் + நித்யா மேனன் படம், GUNDE JAARI GALLANTHAYYINDE. இஷ்க் அளவிற்கு இல்லையென்றாலும் திருப்திகரமாக இருந்தது இந்தப் படம். பழைய கதை + இளமையான திரைக்கதை = சூப்பர் படம். இது தான் இந்தப் படத்திலும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு கதைக்கு வேலையே இல்லை. சுவாரஸ்யமான காட்சிக் குவியல்கள் மட்டும் தான் மொத்தப் படமும். தாராளமாக ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.

நண்பர்களின் ரெக்கமெண்டேஷனில் பார்த்த படம், PREMA KATHA CHITRAM. பேருக்கு தான் பேய் படம். ஆனால் காமெடிதான் பிரதானம். சுமார் ஹீரோ, முட்டைக் கண் தேவதை ஹீரோயின். சுவாரஸ்யமான ஆரம்பத்துடன் தொடங்கி பேய்க் கதையாக தொடரும் இரண்டாம் பாதி என்று படம் நன்றாக இருந்தது. அதிலும் நம் மயில்சாமி டைப் ஆளின் காமெடி தூள்.

மற்றுமொரு ரெக்கமெண்டேஷன் SAAHASAM. ஜெயம் வில்லன் கோபிசந்த் நடித்த படம். வைரத்தை தேடி பார்டர் தாண்டி போகும் சாதாரணனின் கதை. இரண்டாம் பாதி முழுக்க பாகிஸ்தானில் நடக்கிறது. அருமையான களம். வித்தியாசமாக இருந்தது. தாப்ஸி 'நடிப்பு' சூப்பர். பார்க்கலாம்.

"ஹிட் படமாமே, நாம பாக்காம எப்படி" என்று நானே எங்கோ படித்து அல்லது கேட்டு, பின் பார்த்த படம் SWAMY RA RA. சுப்ரமணியபுரம் ஸ்வாதி நடித்த படம். முதல் கதவு திறக்கப்பட்டபோது இவ்வளவு கிடைத்தது, இரண்டாவது கதவிற்குப் பின்னால் இவ்வளவு இருந்தது என்று தினம் செய்தியாக வந்து கொண்டிருக்கும் கேரள அனந்த பத்மனாப சுவாமி கோவில் புதையலில் இருந்து ஒரு தங்க விநாயகர் சிலையை கோவில் குருக்கள் லவட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். சிலையை வாங்கியவன் லாரியில் அடிபட்டு சாக, சிலை அப்படியே கைமாறிக்கொண்டே வருகிறது. இன்னொரு டிராக்கில் சுமால் டைம் திருடன் ஹீரோ + பிரண்ட்ஸ், லூசு ஹீரோயின் என்று ஒரு கதை. மாமூலாக இல்லாமல் நன்றாகவே இருந்தது சுவாமி ரா ரா.

மேல் சொல்லப்பட்ட படங்களைத் தவிர ஆந்திரத் திரையுலகை அலசியதில் தெரிந்தவை - ரவி தேஜாவிற்கு இந்த வருடமும் ப்ளாப் வருடம் தான். வெளியான ஒரே படம் BALUPU, பிளாப்பு. மற்றுமொரு பிளாப் ஸ்டார் 'ரட்சகன்' நாகர்ஜுனா. ரொமாண்டிக் GREEKU VEERUDU, ஆக்ஷன் BHAI என்று வெளியான இரண்டு படங்களும் அவுட். படுபயங்கர வயலண்ட், பார்க்கவே முடியல என்று ஒதுக்கப்பட்ட படம் ஜூனியர் NTR + ஸ்ருதிஹாசன் நடித்த RAMAYYA VASTHAVAYYA. சூப்பர் காமெடியன் பிரம்மானந்தம் ஹீரோவாக நடித்த படம் JAFFA. படத்தை விட டிரைலர் பன்மடங்கு ஹிட். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ராம் சரண், பிரியங்கா சோப்ரா ஜோடியாக நடித்த போலீஸ் படமான THOOFANஐ பார்த்து விட்டுத் THOO... என்று துப்பாதவர்கள் குறைவு.

ஹிந்தி போல் பச்சனின் ரீமேக்கான MASALA நன்றாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். அதேபோல சித்தார்த் - சமந்தா நடித்த JABARDASTH. இரண்டையும் பார்க்கவேண்டும். பார்த்தவர்கள் பாராட்டிய லோ பட்ஜெட் கவர்ச்சித் த்ரில்லர் என்று அறியப்படும் THEATRELO NALUGURU படம் எங்கும் கிடைக்கவில்லை. நண்பர்கள் லின்க் கிடைத்தால் ப்ளீஸ் கொடுங்கள். சமீபத்தில் வெளியான படங்களில் VENKATADRI EXPRESS நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பிரேம கதா சித்திரம் 'மயில்சாமி' தான் இங்கும் ஹைலைட் என்கிறார்கள். பார்த்துவிட வேண்டும். இந்த வருடம் மீதியுள்ள 10 நாட்களில் வேறு எந்தப் படமும் வெளியாவது போல் தெரியவில்லை. ஆக இது தான் 2013 ஆம் ஆண்டு நான் கண்ட தெலுங்கு சினிமாக்கள். இந்த லிஸ்ட் தவிர வேறு நல்ல படங்கள் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்துங்கள், பார்த்துவிடுகிறேன்.

You Might Also Like

5 comments

  1. அடேங்கப்பா.. தெலுங்கு சினிமா பத்தி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீங்களே.. தெலுங்கு நல்லா தெரியுமோ ?? அடுத்ததா எந்த லாங்க்வேஜ் ?
    நான் இதுவரைக்கும் மொத்தமா பாத்த தெலுங்கு படங்களோட எண்ணிக்கையே 10-ஐத் தாண்டாது. நான் எங்கிட்டு போயி முட்டிக்க ??
    இந்தா பொறுங்க,, நானும் டாப் 10, ஒர்ஸ்ட் 10-னு ஆரம்பிச்சிடறேன் :) :)

    ReplyDelete
  2. சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிக படங்கள் பார்த்திருக்கிறேன்.ஆனால் சென்ற வருடத்தை விட குறைவாகவே பதிவு எழுதி இருந்தீர்கள்.
    அமலா பால் லட்டு மாதிரி உள்ள ஹீரோயினா ? உவ்வே
    write hindi,malayalam and tamil quickly

    ReplyDelete
  3. Hi.. I like your posts on various strands of cinema a lot and have nominated your blog for a Liebster award.
    You can visit the link http://sens-e-peak.blogspot.in/2013/12/liebster-nomination.html to complete the procedure.

    ReplyDelete
  4. Waiting for tamil movies top 10

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...