ஒரு நல்ல படத்தைப் பார்த்துவிட்டு, அதை பற்றி இந்தத் தளத்தில்
அறிமுகப்படுத்தி எழுதும் நேரத்தில், இன்னொரு படத்தைப் பார்த்து விடலாம் – என்கிற எனது
சுயநல எண்ணத்தின் காரணமாகத்தான் பெரும்பாலும் நான் சினிமா விமர்சனக்கட்டுரைகளையோ, அறிமுகக்கட்டுரைகளையோ
எழுதுவதில்லை. மற்றுமொரு முக்கிய காரணம், ஒரு படத்தைப் பற்றிய பதிவை (அறிமுகம் / விமர்சனம்)
வாசிக்கும் நாம், அந்தப் படத்தைப் ஏற்கனவே பார்த்திருந்தால் 1) “ஆம், நல்ல படம்”
2) “நிச்சயம் பார்க்க வேண்டிய படம்” 3) “என்னமோ தெரியல இந்த படம் எனக்குப் பிடிக்கல”
ஆகிய மூன்றை மட்டும் தான் பெரும்பாலும் பின்னூட்டமாக இடுகிறோம். படத்தைப் பார்த்திருக்கவில்லை
என்றால் இன்னும் மோசம் “நல்ல படம் போல் தெரிகிறது. உடனே டவுன்லோட் செய்கிறேன். நேரம்
கிடைக்கும்போது நிச்சயம் பார்த்துவிடுகிறேன்” என்று மட்டும் தான் பின்னூட்டம் இடுகிறோம்.
இவற்றை மட்டும் தான் இட முடியும். அனைவருக்கும் தெரிந்த ஒரு படமாகவோ அல்லது ரிலீஸான
புதுப் படமாக இருந்தாலாவது அந்தப் பதிவில் ஒரு விவாதம் நடக்கும். இவை தவிர படம் அறிமுகங்களுக்கு
நம்மால் பொதுவாக எந்த கருத்தையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ள முடியாது என்பது
எனது கருத்து.
எனவே மிகத்தீவிரமாக யோசித்து நான் ஒரு மிகப்பெரிய முடிவை
எடுத்திருக்கிறேன். பேஸ்புக்கில் தனி பக்கத்தில் இனி நான் பார்க்கும் நல்ல படங்களை நண்பர்களுக்கு
சிபாரிசு செய்யலாம் என்பது தான் அந்த முடிவு. இப்படிச் செய்வதால் உங்களுக்கும் எனக்கும் நிறைய டைம் சேவ் ஆகிறது பாருங்கள் (ரொம்ப ஓவராத்தான் போறேனோ?)
இந்த எண்ணம் பல நாட்களுக்கு முன்னரே உதித்து, அதே வேகத்தில் முகப்புத்தகபக்கத்தையும் (Facebook Page) ஆரம்பித்தேன். ஆனால் ஆரம்பித்த இருந்த சூடு இரண்டொரு நாட்களிலேயே பல காரணங்களால் கப்பென்று அணைந்துவிட்டது. இப்பொழுது அதை தூசி தட்டி வெளியே எடுத்துள்ளேன். தினமும் மினிமம் ஒரு படத்தைப் பற்றியாவது சுருக்கமாக எழுதி, அவற்றைப் பற்றிய YouTube வீடியோக்களுடன் அறிமுகப்படுத்துவது என் எண்ணம். டவுண்லோட் லின்க்கையும் முடிந்தால் பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு நண்பர்களாகிய உங்களது ஆதரவு தேவை.
இந்த எண்ணம் பல நாட்களுக்கு முன்னரே உதித்து, அதே வேகத்தில் முகப்புத்தகபக்கத்தையும் (Facebook Page) ஆரம்பித்தேன். ஆனால் ஆரம்பித்த இருந்த சூடு இரண்டொரு நாட்களிலேயே பல காரணங்களால் கப்பென்று அணைந்துவிட்டது. இப்பொழுது அதை தூசி தட்டி வெளியே எடுத்துள்ளேன். தினமும் மினிமம் ஒரு படத்தைப் பற்றியாவது சுருக்கமாக எழுதி, அவற்றைப் பற்றிய YouTube வீடியோக்களுடன் அறிமுகப்படுத்துவது என் எண்ணம். டவுண்லோட் லின்க்கையும் முடிந்தால் பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு நண்பர்களாகிய உங்களது ஆதரவு தேவை.
அதற்காக இனி பதிவெழுத மாட்டேன் என்று சொல்லவில்லை. என் பணி
பதிவெழுதிக்கிடப்பதே. பட அறிமுகங்கள் மட்டும் இனி இந்தத் தளத்தில் இருக்காது. மற்றபடி
விவாதங்கள், தொடர்கள், இன்ன பிற கிறுக்கல்கள் நிச்சயம் தொடரும். நான் பார்த்த நல்ல
படங்களை நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த முயற்சியின்
நோக்கம். எனது இந்த முயற்சி “வொர்த்து” என்று நீங்கள் நினைத்தால், ‘LIKE’ போட்டு பின்தொடருங்கள்.
நீங்கள் மட்டும் பின்தொடருவதோடு நின்றுவிடாமல், நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.
முகப்புத்தகப்பக்கத்தின் பெயர் – Pfool’s movie recommendations (பி.கு: Pfool என்பது எனது கல்லூரி நண்பர்கள் என்னை ஆசையாக அழைக்கும்
ஒரு மட்டமான பட்டைப்பெயர்). நமது தளத்தின் வலது பக்கத்தில், இதற்கான விட்ஜட்டை இணைத்துள்ளேன்.
அங்கிருக்கும் Like பட்டனை அழுத்திவிட்டால் வேலை முடிந்தது. (முகப்புத்தக லின்க் –
http://www.facebook.com/pages/Pfools-movie-recommendations/233998196650340).
இத்தோடு நின்று விடாமல் இன்னும் வேறு என்னென்ன செய்தால் பக்கம் நன்றாக, தனித்து நிற்கும்
என்று கூறினால், சிரம் தாழ்த்தி அதை ஏற்று, முடிந்ததைச் செய்கிறேன்.
தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி…