நானும் எனது டிவிடிக்களும் பாகம் II

8:43:00 AM

ானும் எனது டிவிடிக்களும் பாகம் I பதிவைப் பற்றி நண்பர்கள் பலர் தொலைபேசி மூலம் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிறைய பேரைப் பற்றி எழுதாமல் விட்டதே அப்போது தான் தெரிந்தது. எல்லாவற்றையும் விட ஹைலைட் 'மாப்ள உன் டிவிடி ஒன்னு எங்கிட்ட இன்னும் இருக்குடா' என்று நண்பன் ஒருவன் கூறியது. ஆக்சுவலி இவன் ஒருவனாவது அட்லீஸ்ட் ஒத்துக்கொள்கிறானே என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. சரி இனி போன பதிவில் சொல்லாமல் விட்ட சிலவற்றைப் பார்த்துவிட்டு பின் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.

கல்லூரி நாட்களில் நான் பெரிதும் நம்பி இருந்தது தஞ்சாவூரை மட்டும் தான் என்றாலும், கல்லூரி விடுமுறை நாட்களில் நான் பெரிதும் சுற்றியது மதுரையில் தான். மதுரையைச் சேர்ந்த எனது நண்பன் முத்துராஜின் மூலம் மீனாட்சி பஜார் என்னை கமான் கமான் என்று வரவேற்றது. தஞ்சாவூரைவிட பல மடங்கு பெரிய கலெக்ஷன். 200க்கும் மேற்பட்ட கடைகள். படத்தின் பெயரைச் சொன்னால் போது எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது என்றே தெரியாது ஆனால் போகும் போது நாம் தேடி வந்த பட டிவிடி நம் கையில் இருக்கும், அதுவும் மற்ற ஊர்களை விட விலை குறைவாக. நான் முதன் முதலில் மதுரையில் டிவிடி வாங்கும் போதே விலை 35 ரூ தான். முதன் முதலாக நான் அங்கு சென்ற போதே 15 டிவிடிகள் வாங்கியதாக நியாபகம். இப்போது 15 ரூ. இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் முத்துராஜுடன் சேர்ந்து கொண்டு எனது லைப்ரரியை வலுவாக்கிக் கொண்டிருக்கிறேன்

அடுத்தது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு டிவிடி கடை. இங்கு டிவிடி வாங்க வேண்டும் என்பதற்காகவே தஞ்சாவூரிலிருந்து போடிக்கு நேரடிப் பேருந்துகள் இருந்தாலும், திண்டுக்கலில் இறங்கி மாற இந்தக் கடை மட்டும் தான் ஒரே காரணம். அன்றிலிருந்து இன்றுவரை 25ரூ தான். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பீலிங். போடி மாநகரில் எனக்குத் தெரிந்து மொதமே 5 கடைகள் தான் இருக்கிறது, அதாவது எக்ஸ்க்லூஸிவ் டிவிடி கடைகள். அதில் இரண்டு நான் ரெகுலராய் செல்வது. ஒவ்வொரு முறை நான் செல்லும் போதும் 50 ரூ ஆரம்பித்து பின் மன்றாடி என்னை அடையாளம் கண்டு, சிரித்து ஸ்டேஷனுக்கு அவ்வளவு குடுத்தேன், ஏட்டையாவுக்கு இவ்வளவு குடுத்தேன் என்று பஞ்சப்பாடு பாடி ஒரு வழியாக 30 ரூபாய்க்கு வாங்கும் முன் போதும் போதும் என்றாகிவிடும்.     

ல்லாவற்றையும் விட ஒரு சமயம் "40 ரூபாய்க்கு தான் கொடுக்கனும்னு சங்கத்துல முடிவு செஞ்சிருக்கு" என்று சொன்ன போது எனக்கு கடுப்பாகி விட்டது. பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் இப்போ தான் 30 ரூபாய்க்கு வாங்கிட்டு வரேன் என்று எனது பைக்கில் இருந்த இரண்டு டிவிடிக்களை எடுத்துக் காட்டினேன். "அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டவன் 30 ரூபாய்க்குக் கொடுத்தான்ஒரு டிவிடி வாங்க எம்புட்டு பிட்டு போட வேண்டியிருக்கு!

ல்லூரி நாட்கள் முடிந்து பெங்களூர் வந்து கொஞ்ச காலத்திற்கு சாதா 10ரூ, 20 ரூ டிவிடி என்று வாங்கவில்லை. எல்லாமே ஒரிஜினல். விலையோ மினிமம் ரூ.399. ஒரு 20 டிவிடி வாங்கியிருப்பேன், கட்டுப்படியாகவில்லை. அதற்கு பதில் Seventymmல் ரெஜிஸ்டர் செய்து 3 மாதம் ஒருநாள் விடாமல் ஒரிஜினல் டிவிடியில் படம் பார்த்தேன். டெலிவரி விஷயத்தில் பயங்கரமாக விளையாட கடுப்பாகி அதிலிருந்து விலகினேன். தமிழ் படங்கள் தமிழகத்தில் ரிலீஸான முதல் நாளே பெங்களூரு தெருக்களில் திருட்டு டிவிவிகளாகக் கிடந்தது முதலில் பயங்கர அதிர்ச்சியளித்தது, பின் பழகிவிட்டது ஏனென்றால் ஒரு முறை இரவு 9 மணிக்கு மேல் என்று நினைக்கிறேன், எங்கள் தெருக்கோடி டிவிடி கடைக்காரன் ஒருவனிடம் ஃபுல் மப்பில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் முதலில் மிரட்டி, பின் கெஞ்சி, பின் மன்றாடி, அவன் த்தூ என்று துப்புவதைக் கூட பொருட்படுத்தாமல் 5ரூ வாங்கிக்கொண்டு போனதை பார்த்த போது (இன்னொரு முறை, நான் பார்க்க தள்ளுவண்டி பழக்காரியிடன் இரு போலீஸார் வாங்கியது 7ரூ. அவளும் துப்பியதில் ஆச்சரியமும் இல்லை. அதிர்ச்சியும் இல்லை. அது வேறு கதை)

அந்தச் சமயத்தில் பெரும்பாலும் 'டாரண்டே நமஹ' என்றிருத்தேன். அப்போது தான் அதே முத்துராஜின் மூலம் அவன் அலுவலக நண்பன் டேனியலின் நட்பு கிடைத்தது. Rapidshare Premium Account பற்றியும் தெரியவந்தது. டேனியலுடன் கூட்டாக Premium Account வாங்கி படங்களை தரவிறக்க ஆரம்பித்தேன். சீடிங், பியர்ஸ் என்று டாரண்டின் லொட்டு லொசுக்குத் தொல்லை இதில் இல்லை என்பதால் விறு விறுவென்று வளர ஆரம்பித்தது எனது கலெக்ஷன்


படங்களைத் தரவிறக்க நான் பெரிதும் நம்புவது www.warez-bb.org என்னும் தளத்தை தான். இங்கு கிடைக்காத படமே இல்லை. அற்புதமான இலவச தளமிது. உலகப் படங்களுக்கு www.foreignmoviesddl.com இந்தத் தளத்தை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஆனால் இப்போது RS சுட்டிகள் இந்தத் தளத்தில் மிகவும் குறைவாகவே இடம் பெருகிறதுwarez-bb இல்லையேல் நானில்லை என்ற அளவிற்கு நான் இதன் அடிமை

வலையுலகைப் பொறுத்தவரை ஆங்கிலப் படங்களைப் பற்றி நான் சுடச் சுடத் தெரிந்து கொண்டது நண்பர் ஹாலிவுட் பாலாவின் மூலம் தான். என்னை பதிவுலகிற்கு வரவழைத்ததும் அவரே (என்னை மட்டும் அல்ல :-D) ஆனால் நண்பர் இப்போது கடையை மூடி விட்டார். அடுத்தது நண்பர் ஜாக்கி சேகர். அவர் எழுதும் படங்களை எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாமல் அன்றே தரவிறக்கி அடுத்த நாளே பார்த்து விடுவேன் நான். மேலும் நண்பர் கனவுகளின் காதலன், கருந்தேள் கண்ணாயிரம், thacinema msk, பட்டர்ப்ளை சூர்யா, இப்போது புதிதாக நண்பர் கொழந்த மற்றும் உலகசினிமா பாஸ்கரன், இயக்குனர் சார்லஸ், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது தளம் என்று போய்க்கொண்டிருக்கிறது எனது தேடல். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


நண்பர் கொழந்த எனக்கு ரொம்ப நாள் கஷ்டப்பட்டு கிடைத்த படத்தைப் பற்றி எழுதச் சொல்லியிருந்தார். warez-bb பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து இந்த 'ரொம்ப நாள்' சங்கதியே இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் சந்தோஷ் சிவன் இயக்கிய 'நவரஸா' மற்றும் படத்தை பல நாட்கள் தேடியும் கிடைக்காத 'Pixar Animated Movies Collection' டிவிடிகளை கடைசியாக பெங்களூர் ஃபோரம் லேண்ட்மார்க்கில் வாங்கினேன்


சமீபத்தில் வெகு நாட்களாய் தேடிக் கொண்டிருந்த Citizen Kane, The Road Home, The Way Home, Carandiru படங்களை அருமையான குவாலிடியில் சப்-டைட்டிலுடன் பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் நண்பர் பாஸ்கரன் அவர்களிடமிருந்து வாங்கினேன். Google Videosல் அதே சந்தோஷ் சிவனின் 'மல்லி', பாஸ்கரன், ஜாக்கி மாறி மாறி அறிமுகப் படுத்திய 'Halfaouine' படங்கள் கிடைத்தது மகிழ்ச்சி

அதே போல் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு படம் 'Run Lola Run'. இந்தப் படம் என்னிடம் இருக்கிறது. ஆனால் எங்கு தேடியும் சரியான சப்-டைட்டில் இல்லை. நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இந்தப் படத்தைப் பற்றிய பேச்சு வந்தது. நான் இன்னும் பார்க்கவில்லை என்று சொன்னதுதான் தாமதம். உடனே "என்னிடம் இருக்கு என்னிடம் இருக்கு" என்று குதித்தவர் சப்-டைட்டிலுடன் கூடிய காப்பியை உடனே  பென்-டிரைவில் கொடுத்தார். "நீ இவ்ளோ படம் வச்சிருக்க, உனக்கே ஒரு படம் கொடுத்தவன் இந்தப் பிரகாஷ் என்று பேர் வரட்டும்" என்று சொன்னார். காமெடியான ஆள் அவர் :-) 



இப்போது கொஞ்ச நாட்களாய் தேடிக்கொண்டிருக்கும் படங்கள் என்று பார்த்தால் பாலுமஹேந்திராவின் 'வீடு' மட்டும் தான். எங்கு கிடைக்கிறது என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லவும்.

You Might Also Like

4 comments

  1. இங்கே "வீடு" கிடைக்குது
    http://www.tamiltorrents.net/forums/showthread.php?t=65125

    ReplyDelete
  2. இங்கேயும்

    http://firstreel.blogspot.com/2010/08/veedu-tamil-movie-online.html

    ReplyDelete
  3. http://www.foriegnmoviesddl.com/ இதை http://www.foriegnmovies.ddl என்று தவறாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  4. மிக்க நன்றி பட்டிக்காட்டான். இத்தனை நாள் நான் தேடிய படம் YouTubeல் இருப்பது தெரியாமல் இருந்து விட்டேன் :-) வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...