#100நாடுகள்100சினிமா #42.GREECE - MISS VIOLENCE (2013)

6:38:00 AM

Alexandros Avranas | Greece | 2013 | 98 min.


(*** English write-up & Download link given below ***)

ஒரு பிறந்தநாள் பார்ட்டியுடன் தொடங்குகிறது படம். 11 வயதாகும் Angeliki புத்தாடை அணிந்து அழைத்துவரப்படுகிறாள். குடும்பத்தினர் சுற்றி நின்று பிறந்த நாள் வாழ்த்து பாட மெழுகுவர்த்தி அணைத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறாள். மற்றவர்கள் போட்டோ எடுத்துக்கொண்டு கேக் சாப்பிடத் தயாராகிகொண்டிருக்க, சிரித்தபடியே பால்கனிக்குப் போய் நான்காவது மாடியில் இருந்து குதிக்கிறாள் Angeliki. சிறிய ரத்தக்குளமருகே கிடைக்கும் அவளது உடலை மற்றவர்கள் வந்து பார்ப்பதை பால்கனிக்கோணத்திலிருந்து நாம் பார்க்க, டைட்டில்ஸ் ஓடுகிறது.

இப்படித்தான் தொடங்குகிறது Miss Violence திரைப்படம். ஆரம்பக்காட்சியில் என்ன ஏது என்று யோசிப்பதற்குள் நம்மைத் தாக்கிவிடும் திர்ச்சி படம் முழுவதும் தொடர்கிறது. ஏதோ தவறாக இருக்கிறது என்பதை நாம் உணர்வோமே தவிர எதுவுமே நேரடியாகத் தெரியாது. குடும்பத்தில் ஒரு மரணம். தற்கொலை. அதை அந்தக் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் விதமே பேரதிர்ச்சி. ஏதோ இதை எதிர்பார்த்திருந்தவர்கள் போல அடுத்த வேலையைப் பார்க்கப்போய்விடுகிறார்கள். விசாரிக்க வரும் அதிகாரிகளுக்கே எல்லாம் 'சகஜமாக' இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நடுத்தர வயதைத் தாண்டிய குடும்பத்தலைவன். அவனது மனைவியா, மகளா என்று ஆரம்பத்தில் நம்மால் சொல்லவே முடியாத ஒரு இளம் பெண். இறந்த Angeliki தவிர ப்ரைமரி ஸ்கூல் போகும் வயதில் அவளுக்கு ஒரு மகன், மகள். ஒரு வயதான் பெண், ஒரு டீன் ஏஜ் பெண் - இது தான் அந்தக் குடும்பம்.

யார் எது கேட்டாலும் வலிந்து சிரித்து பதில் சொல்லும் அந்த இளம் பெண்ணின் கண்களில் இருக்கும் வெறுமையே நமக்கு ஆயிரம் கதைகளைச் சொல்லாமல் சொல்கிறது. யார் இவர்கள்? அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாத அந்தக் குடும்பத்தலைவன் இவர்கள் அத்தனை பேரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் விதம் ஆச்சரியம். யார் அவன்? அந்தப் பெண்கள் யார்? அவன் இவர்களை என்ன செய்கிறான்? அந்த 11 வயதுச் சிறுமி எதற்காக தற்கொலை செய்துகொண்டாள்?

கதை என்று சொல்லமுடியாது. எல்லாம் தப்பாக இருக்கும் ஒரு குடும்பத்தை சற்று எச்சரிக்கையுடன் அருகிலிருந்து பார்க்கும் உணர்வைத் தருகிறது படம். வசனங்கள் குறைவு. மெதுவாக நிதானமாக, நகர்கிறது காட்சிகள். ஓரிடத்தில் தொடங்கும் காட்சி, நமக்குப் புரிந்து புரிவதற்குள் முடிந்துவிடுகிறது. பார்த்துக்கொண்டிருக்கும் நாம் இங்கிருக்க, கதாப்பாத்திரங்கள் காட்சிக்கோணத்தை விட்டு நகர்ந்து சென்றுவிடுகிறார்கள். பூட்டிய கதவிற்கு அந்தப் பக்கம் நடப்பது என்ன என்று நமக்குச் சொல்லப்படுவதேயில்லை. Domestic Violence and Abuse தான் கதைக்களம் என்பது படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டாலும், படத்தில் காட்டப்படும் நேரடி வன்முறைக்காட்சி ஒன்றே ஒன்று தான். அந்தக் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை (அந்தச் சிறுமி ஏன் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை) கிட்டத்தட்ட கிளைமாக்ஸில் தான் சொல்கிறார்கள். அந்த ஒரு காட்சி மொத்தப்படத்தையும் விளக்கிவிடுகிறது. இதில் ஏதாவது ஒன்றாகத் தான் இருக்கும் என்று நாம் யூகித்து வைத்திருக்கும் ஒன்று தான் பிரச்சனை என்றாலும், அந்தக் காட்சி வரும் இடமும் அதற்கும் முன்-பின் நடக்கும் சம்பவங்கள் கோர்க்கப்பட்டிருக்கும் விதமும் நிச்சயம் நம்மை அசைத்துப்பார்த்துவிடும்.

படத்தின் இயக்குனர் Alexandros Avranas. ந்தப் படத்திற்காக 2013 வெனீஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான Silver Lion விருதை வென்றிருக்கிறார். இவரது சினிமா மொழி ஆச்சரியப்படவைக்கிறது. நேரடிக்காட்சிகள், வசனங்கள் மூலம் நடப்பவற்றச் சொல்லாமல், ஒரு கதவு திறக்கப்படுவதையும், பூட்டப்படுவதையும் வைத்தே சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுகிறார். சொல்கிறார் என்று சொல்வதை விட அதிர்வை நம்முள் எளிதாகக் கடத்திவிடுகிறார். கிரீஸ் நாட்டில் நிலவிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை, நசுக்கப்படும் எளியவர்களது கதைகளை, சிதைந்து போயிருக்கும் குடும்பங்களையும் தன் படத்தின் மூலம் வெளிச்சமிட்டுக்காட்டியிருக்கிறார்.

Yorgos Lanthimos இயக்கிய Dogtooth (2009) படம் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காது.

அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.                 

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

************************

Its Angeliki’s 11th birthday. In her new birthday dress, she is comes out of her room, blows the candles and pose for photos. When the others are getting ready for the birthday feast Angeliki with a smile on her face goes to the balcony and jumps from the forth floor.   

Miss Violence deals with Domestic Violence and Abuse. But the way things are handled by the Father in the not-so-perfect Greek family is what that creeps us. We know something is wrong but nothing is shown directly, neither the violence nor the abuse.
Dir.Alexandros Avranas
Directed by debutant Alexandros Avranas, Miss Violence won the Silver Lion for Best Director at the 70th Venice International Film Festival. The Father actor, Themis Panou won the Volpi Cup for Best Actor.

A must watch film, though less striking than Director Yorgos Lanthimos’s Dogtooth (2009)



Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...