#100நாடுகள்100சினிமா #32.PHILIPPINES - ON THE JOB (2013)

10:20:00 PM

Erik Matti | Philippines | 2013 | 121 min.
 (*** English write-up & Download Link given below ***)

'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று சொல்லி படத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால் நடப்பவற்றைப் பார்த்தால் பதறுகிறது. இப்பெடியெல்லாம் கார்டு போட்டு எப்படி இவர்களால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் படம் எடுக்க முடிகிறதென்று!

Tatang, Daniel - இருவரும் கைதிகள். Tatang வயதானவன். பல வருடங்களாக சிறையில் இருப்பவன். அவனது குடும்பம் (மனைவி, மகள்) அவன் வெளிநாட்டில் வேலை செய்வதாக நம்புகிறார்கள். அவ்வபோது தன் குடும்பத்தினரை வந்து பார்க்கிறான் (?) பணம் கொடுக்கிறான். Daniel இளைஞன். அவனுக்கு ஒரு காதலி உண்டு. Tatang 'ஐ தன் குருவாக மட்டுமல்லாமல் தந்தையாகவே நினைக்கிறான். Tatang, Daniel இருவரும் பகுதி நேரக் கொலைகாரர்கள்!

பார்க்க திருவல்லிக்கேணி மேன்ஷன் போல இருக்கும் சிறைச்சாலையிலிருந்து அவ்வபோது வெளியே வந்து தங்களுக்கு கொடுக்கப்படும் டார்கெட்களைப் போட்டுத் தள்ளிவிட்டு, குடும்பத்தினரைப் பார்த்துப் பேசி, ஊர் சுற்றி ஷாப்பிங் எல்லாம் முடித்து விட்டு, திரும்பவும் ஜெயிலுக்கே வந்துவிடுவார்கள். Tatang இதைப் பல வருடங்களாக செய்து வருகிறான். Daniel இப்போதைக்கு அவனது அஸிஸ்டண்ட். உள்ளேயும் வெளியேயும் இதற்குப்பின்னால் பல தலைகள் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆரம்பக்காட்சியில் இந்த இருவரும் Tiu என்பவனை நடுரோட்டில் வைத்து சுடுகிறார்கள். லோக்கல் போலீஸிலிருந்து சிறப்புப் பிரிவு போலீஸான Agent Coronel கேஸ் கைமாற்றப்படுகிறது. இந்த Coronel பிரபல அரசியல்வாதி ஒருவனின் மருமகன். அந்த அரசியல்வாதி, முன்னால் ராணுவ வீரனும் இந்நாளில் சட்டசபைக்கு (senate) போட்டியிட்டுக் கொண்டிருக்கும் பெரிய தலை ஒருவனின் நண்பன்.

இப்படி படத்தில் முக்கியமாக 5, 6 கேரக்டர்கள். கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகள் வெளியே வந்து பிரச்சனைகள் வளர, Tatang-Daniel இருவரும் என்ன ஆனார்கள் என்பது தான் கதை.

பக்கா ஆக்ஷன் த்ரில்லர். நடுநடுவே குடும்பம், செண்டிமெண்ட், விசுவாசம் என்று பக்கா கலவையாகக் கொடுத்திருக்கிறார்கள். எந்த நாடாக இருந்தாலும் அதிகாரம் கையில் இருந்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமாலும் செய்வார்கள் என்பதையே இந்தப் படமும் சொல்கிறது. சாதாரண திருடன் போலீஸ் விளையாட்டாக இல்லாமல் அரசியல் சார்ந்த த்ரில்லராக அசத்துகிறது. கிளைமாக்ஸ் பரபரப்பில் நாமும் சிக்கிக்கொள்வது படத்தின் வெற்றி. பரபரவென்று நகரும் திரைக்கதையில் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முரிந்துவிடுகிறது.

2013 Cannes திரைப்படவிழாவில் Director's Fortnight பிரிவில் திரையிடப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் Erik Matti. அமெரிக்க ரீமேக் தயாராகிக்கொண்டிருப்பதாகத் தகவல். இரண்டு நாட்களுக்கு முன்னர் பணம் வாங்கிக்கொண்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து ஒரு கைதியை தப்புவிக்கும் அதிகாரிகளது CCTV காட்சிகளை நீங்களும் பார்த்திருப்பீர்கள். தமிழுக்க ஏற்ற கதை.

வித்தியாசமான கதைக்களன், அசத்தலான திரைக்கதை, அருமையான ஒளிப்பதிவு - அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.

(பி.கு: படத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு செய்தி - On the Job இயக்குனரின் சமீபத்திய படம் - Tiktik: The Aswang Chronicles (2012). சங்கிலியை உடைத்துக்கொண்டு கபாலி நிற்கும் முதல் போஸ்டர் நினைவிருக்கிறதா? அந்தப் போஸ்டர் இந்தப் படப்போஸ்டரின் தழுவல் தான். ஹி ஹி...)

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். உங்களது நண்பர்களுக்கும் இந்தப் படத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள்.

************************************

'Based on True Events', On the Job (2012) is the story of two hitmen - Tatang and Daniel who are prison inmates. They are contract killers who come out temporarily to kill their targets and get paid. Things change when a guy names Tiu is murdered and the case is handed over to special branch officer Agent Coronel who is the son-in-law of a popular politician who is in-turn friends with a Senate Candidate.

Story is around these 4, 5 important characters and the problems that arise because of Agent Coronel's investigation and how that changes the fate of Tatang and Daniel is the rest of the story.  

Dir. Erik Matti
Directed by Erik Matti, On the Job (2012) primiered at the Director's Fortnight during 2013 Cannes International Film Festival. An English remake is in Production and the Director has announced a six-part miniseries which will be the movie's sequel.

A MUST WATCH action-thriller movie

Other Recommended Filipino movies
1) Metro Manila (2013) - https://goo.gl/fPR638
2) Heneral Luma (2015)

Trailer - https://www.youtube.com/watch?v=Hd81i3KuI6w
Torrent Link - http://extratorrent.date/torrent/3510085/On+the+Job+2013+720p+BluRay+x264+AAC+-+Ozlem.html

Letterboxd - https://letterboxd.com/pradeepsastra/list/100-countries-100-films-100-100/


Hit Like & share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

1 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...