#100நாடுகள்100சினிமா #38.ALGERIA - OUTSIDE THE LAW (2010)
7:36:00 AM
Rachid Bouchareb | Algeria / France | 2010 | 137 min.
(*** English write-up & Download Link given below ***)
Abdelkader, Messaoud, Said மூவரும் அண்ணன்
தம்பிகள். சிறுவயதில்
நிலப்பத்திரம் இல்லாததால் பக்கத்து நிலக்காரனால் ஏமாற்றப்பட்டு ப்ரென்ச் அதிகாரி ஒருவர்
இவர்களது குடும்பத்தைத் துரத்தியடிப்பதிலிருந்து
தொடங்குகிறது படம். The Sétif massacre என்றழைக்கப்பட்ட தாக்குதலில் தந்தை பலியாக மூத்தவனான Abdelkader போலீஸில்
சிக்குகிறான். இரண்டாமானவனான Messaoud ப்ரான்ஸிற்காக
சண்டையிட Indo-China (வியட்நாம்) விற்குச் செல்கிறான். சையத் தனது தாயை அழைத்துக்கொண்டு பாரீஸிற்கு
புலம்பெயர்கிறான். சிறையிலிருக்கும் Abdelkader, அல்ஜீரிய விடுதலை இயக்கமான FLN (National Liberation Front) கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறான். ப்ரென்ச் காலனியாக இருக்கும் அல்ஜீரியா விடுதலையடைய ஒவ்வொரு
அல்ஜீரியனும் போராட வேண்டுமென்று நினைக்கிறான். வியட்நாமில் ப்ரான்சிற்காக போர் செய்து தோற்கும் Messaoud கிட்டதட்ட
இதே நினைப்புடன் தான் தாயகம் திரும்புகிறான். ஆயுதப் போரில் நம்பிக்கையிழந்தவனாக இருந்தாலும், ஏற்கனவே FLN இல் முக்கிய
பொறுப்பில் இருக்கும் தனது சகோதரனுடன் இணைந்து கொள்கிறான். இளைவனான சையத் நிதர்சனம் உணர்ந்தவன். ஆரம்பத்தில்
பெண்களை வைத்து பிசினஸ் செய்து, பிறகு கேளிக்கை பார் ஒன்றைத் தொடங்கி, வளைய வேண்டிய
இடத்தில் வளைந்தும், ஓட வேண்டிய இடத்தில் ஓடியும் வாழ்கிறான். தனது கனவான
பாக்ஸிங் போட்டிக்காக வீரன் ஒருவனையும் தயார் செய்கிறான்.
அல்ஜீரிய
விடுதலைப் போராட்டத்தின் இறுதி காலகட்டங்களான 1945 முதல் 1962 வரையிலான சம்பவங்களை இம்மூன்று சகோதரர்களின்
பார்வையில் சொல்கிறது இந்தப் படம். ஆப்ரிக்க இனத்தவர் வாழும் முஸ்லீம் நாடான அல்ஜீரியா, முதலாம் உலகபோருக்கு
முன்பிருந்தே பிரென்ச் காலனியாக இருந்துவந்திருக்கிறது. பெரும் போராட்டத்திற்குப் பிறகே விடுதலையாகியிருக்கிறது. மிகப்பிரம்மாண்ட
பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சில வரலாற்றுப் பிழைகள் இருப்பதாகச்
சொல்லப்பட்டாலும், ஆயுதப்போராட்டக்குழுவான FLN, அதன் செயல்பாடுகள், அவர்களுக்கென்றிருக்கும் கட்டுப்பாடுகள், குடும்பம், காதல் போன்றவற்றை
ரரிக்கும்படியாகக் கொடுத்திருக்கிறார்கள். நேரடி சட்டதிட்டங்களால் இவர்களை ஒன்றும் செய்ய
முடியாத ப்ரென்ச் போலீஸ், Red
Hand என்ற ரகசிய அமைப்பைத் தொடங்கி அவர்கள் வழியிலேயே
வன்முறையை ஆயுதமாகக்கொண்டு களத்தில் இறங்குவதையும் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சகோதரர்களை (முக்கியமாக Abdelkader) எப்படியும்
பிடித்துவிட வேண்டும் என்று துரத்தும் ப்ரென்ஸ் போலீஸ் அதிகாரி முக்கிய கதாப்பாத்திரமாக
வருகிறது.
வரலாற்றுப்
படமாக இருந்தாலும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படை எழுதப்பட்ட கதையாக இருந்தாலும், படம் ஒரு அமெரிக்க
வெஸ்டர்ன் தோற்றத்தையே கொடுக்கிறது. ஹீரோயிசம் போற்றுகிறது. இதே FLN பற்றி பேசிய The Battle of Algiers (1966) பேசிய
விஷயங்களில் கால்பங்கு கூட இந்தப் படம் பேசவில்லை. மாறாக ஒரு ஆக்ஷன் படமாக மட்டுமே முன்னிறுத்திக்கொள்கிறது. இது அவசியம்
ஒரு குறையே. மற்றொரு
குறை படத்தின் நீளம். நீண்ட வரலாற்றைச் சொல்லும் படமென்றாலும் தேவையில்லாத காட்சிகள்
நிறைய இருந்தததாகத் தெரிந்தது.
ப்ரான்ஸ்-அல்ஜீரியா-பெல்ஜிய-துனிசியா கூட்டுத்தயாரிப்பான
இந்தப் படத்தின், இயக்குனர் Rachid Bouchareb. இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ் சார்பில் போரிட்ட அல்ஜீரியர்களை பின்னணியாக வைத்து Day of Glory (2006) என்ற படத்தை எடுத்தவர். நேரடி இரண்டாம் பாகமில்லை என்றாலும், இரண்டாம் உலகப்போர்
முடிந்த காலகட்டமான 1945 இல் தான் இந்தப் படம் தொடங்குகிறது. முதல் படத்தில்
பிரான்ஸிற்காக உலகப்போரில் சண்டையிட்டவர்கள், இந்தப் படத்தில் பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற
சண்டையிடுகிறார்கள் என்கிறார் இயக்குனர். முதல் படத்தில் பிரதானக் கதாப்பாத்திரத்தில் நடித்த Jamel Debbouze (Amelie-2001, Angel A-2005, Asterix
& Obelix: Mission Cleopatra-2002), Roschdy Zem, Sami Bouajila மூவரும் முதல் படக்கதாப்பாத்திரப் பெயர்களிலேயே இந்தப் படத்திலும்
வருகிறார்கள். இப்படி
பல ஒற்றுமைகள் உள்ளது.
அல்ஜீரியா சார்பில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்கு
இறுதிச் சுற்று வரை போட்டியிட்டது இந்தப் படம். இயக்குனருக்கு இது மூன்றாவது ஆஸ்கார் பரிந்துரை.
அடிமைகளாகவே
இருந்து வந்தவர்கள் ஒரு கட்டத்தில் நிமிர்ந்தெழுந்து போராடத் தொடங்குவதும் முதலாளிகள்
வேறு வழியில்லாமல் ஓட்டமெடுப்பதும் காலம்காலமாக உலகமெங்கும் நட்னது கொண்டு தான் இருக்கிறது. புரட்சிப்படையின்
சாகசங்கள் சினிமாவாக வருவதும் தொடரும் சம்வங்கள் தான்.
போராட்டக்கதைக்கு
நடுவே, அழகியலும்
ஆக்ஷனும் கலந்திருக்கிறது. வரலாற்று ஆக்ஷன் டைப் படப்பிரியர்கள் இந்தப் படத்தைத் தவறவிடவேண்டாம்.
*******************************
The movie begins with a family being thrown off from their ancestral
land by the French Authorities in the name of Law followed by the 1945 Sétif
massacre where the father is killed, elder brother Abdelkader imprisoned,
second brother Messaoud (Roschdy Zem) goes to fight for the French in Indochina
and the younger brother Said, moves with his mother to Paris where he starts
working as a pimp, opens a club and sponsor boxing matches. This is their story
told that takes place between 1945 and 1962 focussing on their lives in France,
set against the backdrop of the Algerian independence movement and the Algerian
War.
Abdelkader comes back from prison and joins the Algerian Liberation
Group, FLN (National Liberation Front). Messaod returns and joins his elder
brother for a free Algeria. They both believe in Violence whereas Said lives a
separate life in his own terms. The brothers, the transistion in their lives,
the FLN activities, their struggle for freedom, French Police's 'Red Hand'
method to oppress FLN is the total story. The bond between the brothers is
portrayed well and excellently acted by Jamel Debbouze (Amelie-2001, Angel
A-2005, Asterix & Obelix: Mission Cleopatra-2002), Roschdy Zem and Sami
Bouajila.
Dir. Rachid Bouchareb |
Directed by Rachid Bouchareb, a three time academy award nominee for
Best Foriegn Language Film including this film is also the Director of Days of
Glory (2006), story based on Algerians fighting for WWII for France. This movie
can be considered as a stand-alone follow-up to Days of Glory as the story
begins exactly after WWII and the protaganists names are the same.
The movie is lenghty and focusses more on the action part rather than
the actual history part which is definitely a set back.
A watchable history action drama based on True Events.
Trailer
- https://www.youtube.com/watch?v=0BWhzmyDr8g
Download
Link - http://kickass.cd/hors-la-loi-outside-the-law-2010-brrip-h264-aac-gopo-tt6355214.html
Blog
- http://babyanandan.blogspot.in/2016/05/100-100.html
Letterboxd
- https://letterboxd.com/pradeepsastra/list/100-countries-100-films-100-100/
Hit
Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...