Johnnie To படங்கள் - ஓர் அறிமுகம்
7:16:00 AMஹாங் காங் சினிமாவில் John Woo சிறிது காலம் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பியவர். John Woo திரும்பி வந்த பிறகும் கூட "மவுசு" குறையாமல் இருப்பவர். ஹாங் காங் சினிமாவின் மற்றுமொரு அடையாளம் - Johnnie To!
இவரது சில படங்களைப் பற்றி நான் எழுதும் அறிமுகங்கள் அனைத்தும் இந்தப் பக்கத்தில் update செய்யப்படும். மேலும் அதிக உலக/உள்ளூர் சினிமா அறிமுகங்களுக்கு, pls visit - Pfools Movie Recommendations
பல Genre களில் புகுந்து விளையாடக் கூடியவர் (விளையாடியிருப்பவர்) என்றாலும், Johnnie To என்று என்னைக் கேட்டால் க்ரைம், கேங்கஸ்டர், ஆக்ஷன் த்ரில்லர் தான் என்பேன். அந்த அளவிற்கு மிக அற்புதமான க்ரைம் கதைகளை எடுத்துள்ளார். பெரும்பாலும் ஒரே நடிகர்களையே தனது படங்களில் பயன்படுத்துவார். அதே போல Milkyway Image என்ற தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்தே தனது படங்களைத் தயாரிப்பவர். நீங்கள் துப்பாக்கிச் சத்தத்தை விரும்பிக் கேட்பவர் என்றால், இந்த சீரீஸில் நான் எழுதப் போகும் அத்தனை Johnnie To படங்களையும் தவறாமல் பார்த்துவிடுங்கள். ஒவ்வொரு படத்திற்கும் வதவதவென்று எதையாவது எழுதி போரடிக்க விரும்பவில்லை. சிறிய அறிமுகங்களையும், ஹலைட் பாயிண்ட்களையும் மட்டும் சொல்கிறேன். நம்பிப் படத்தைப் பாருங்கள், இன்புறுங்கள். முதலில் உலகளவில் Johnnie To என்றாலே நினைவிற்கு வரும் The Triad Elections திரைப்படங்கள். மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படங்கள், அவசியம் பார்த்தே தீர வேண்டிய படங்கள்.
ELECTION 1 & 2
Johnnie To | Hong Kong | 2005 – 2006 | 101 min - 92 min.
ஹாங்-காங்கின் கேங்கஸ்டர் கும்பல்களை Traid என்று அழைக்கிறார்கள். ஹாங் காங், சீனா தவிர பல நாடுகாளிலும் பரவியிருக்கும், பல குழுக்கள் இணைந்த, 100 வருட பாரம்பரியம் கொண்ட, சக்திவாய்ந்த organized crime குழு தான் இந்த Triad. சீனாவில் இவர்களை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. கிட்டத்தட்ட Crime Syndicate என்று சொல்லுமளவிற்கு organized ஆன ஆட்கள் இவர்கள். அப்படிப்பட்ட ஒரு Triad குழுவான Wo Shing society யின் புதிய தலைவரைத் தேந்தெடுக்கும் பொழுது நடக்கும் சம்பவங்கள் தான் முதல் பாகமான Election.
Lok - Big D. இருவரும் தலைவர் பதவிக்காக போட்டியிடுகிறார்கள். Lok அமைதியான ஆள் என்பதால் சீனியர்களின் சப்போர்ட் அவனுக்கு இருக்கிறது. Big D முரட்டு ஆசாமி. பணக்காரன். எப்படியாவது பதவியைப் பிடித்துவிட வேண்டுமென்று திட்டம் போட்டு காய்களை நகர்த்துகிறான். இறுதியில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் படம்.
Traid தலைவனின் பதவிக்காலம் 2 வருடங்கள் தான் என்பதால் மீண்டும் எலெக்ஷன் வருகிறது. முதல் பாகத்தில் ஜெயித்தவனே (முதல் பாகத்தில் Lok – Big D இருவரில் யார் ஜெய்த்தார்கள் என்று சொல்லி சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை) இரண்டாம் முறையும் பதவிக்கு வர ஆசைப்படுகிறான். அதற்கேற்றார்போல் காய்களை நகர்த்துகிறான். ஆனால் Triad ன் மற்ற மெம்பர்கள், புதிய கேங்-லீடரான பிஸினஸ்மேன் Jimmy யை முன்னிறுத்துகிறார்கள். Jimmy யின் தொழில்களாலும், தொடர்புகாளாலும் Triad செல்வாக்குடன் வளரும் என்று நினைக்கிறார்கள். இம்முறை வென்றது யார்?, மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் இரண்டாம் பாகத்தின் கதை.
ஹாங் காங், சீனா மற்றும் இன்றும் பல நாட்களில் இன்றும் ஆக்டிவாகப் பரவியிருக்கும் Triad குழுக்களை அருகில் இருந்து பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தருவதாலேயே Traid Elections படங்களுக்கு உலகளவிலும் பெரிய வரவேற்பு இருக்கிறது. டாக்குமென்டரி பீல் கிடைத்தாலும், ஒரு நிமிடம் கூட அலுப்பு தட்டாத ஆக்ஷன் விருந்தாக இந்த இரு படங்களையும் கொடுத்துள்ளார் Johnnie To.
VENGEANCE
Johnnie To | Hong Kong | 2009
Hong Kong ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு Johnnie To பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் / தெரிந்திருக்க வேண்டும். பல வருடங்களாக பல ஜானர்களில் படமெடுத்துக் கொண்டிருப்பவர் என்றாலும் க்ரைம் / கேங்க்ஸ்டர் படங்கள் தான் இவரது பெஸ்ட். தனியாக தெரியும் ஆக்ஷன் சீக்வென்ஸ்கள் தான் இவரது பலம். நீளமான காட்சி ஒன்றில், பொறுமையாக அந்த இடத்தைச் சென்றடைந்து, ஒரு தம்'மைப் பற்ற வைத்துக்கொண்டே மெதுவாக துப்பாக்கியை எடுத்து, டம டம டமவென ரத்தம் தெறிக்க தெறிக்க யாராவது யாரையாவது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே நகரும் ஷாட்கள் இவரது படங்களில் தவறாமல் இடம்பெரும். வன்முறை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். கூடவே ஹாங் காங் நாட்டின் கலாச்சாரம், மத நம்பிக்கைகள், ஆன்மா சம்பந்தமான தேடல்கள் என்று இவரது படம் ஒரு தனிப்பட்ட ரசிகர்களுக்கானதாக இருக்கும். சமீபகாலமாகத்தான் இவரது படங்களைத் தேடித் தேடிப் பார்த்து வருகிறேன். அந்த வகையில் நான் பார்த்த படம் Vengeance.
70 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும், நினைவுகளை எந்நேரமும் இழந்துவிடக்கூடிய நிலையில் இருக்கும் Francis என்பவன் தான் நம் ஹீரோ. தாய், தந்தை, இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை முகமூடி அணிந்த மூவர் சராமாரியாக சுட்டுக்கொல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. பலத்த காயங்களுடன் குண்டடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அந்த பெண்ணின் தந்தை தான் இந்த Francis. தன் மகளின் குடும்பத்தை அழித்தவர்களை பழிக்குப் பழி வாங்க நினைக்கிறான். ஆனால் தனியாக அவனால் அதைச் செய்ய முடியாது. காரணம், அவன் தன் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறான். மேலும் பிரான்ஸ் நாட்டுக்காரனான அவனுக்கு இந்த ஊர் புதியது. அந்த நேரத்தில் தான் பணம் கொடுத்தால் கனக்கச்சிதமாக வேலையை முடிக்கும் மூவர் இவனுக்கு அறிமுகம் ஆகிறார்கள். அவர்களுடன் இணைந்து தன் எதிரியைத் தேடிப் புறப்படுகிறான் Francis.
சாதாரண கதை. ஆனால் அதை எடுத்திருக்கும் விதம் தான் அருமை. அழகாக ஒன்றன் பின் ஒன்றாக கதாப்பாத்திரகள் வேறு வேறு சந்தர்ப்பங்களில் அறிமுகமாகி, சந்தித்து, வேட்டைக்கு தயார் ஆகி, களத்திற்கு பயணித்து, சண்டையிட்டு... என்று படம் அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்தாலும் கொஞ்சம் கூட அலுப்பே இல்லாமல் செல்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, பின்னனியிசை, கட் செய்யப்பட்டிருக்கும் விதம் என அனைத்துமே படத்திற்கு தனியொரு ஸ்டைலைக் கொடுத்து மெருகேற்றுகிறது. முக்கியமாக Johnnie To ஸ்டைலான ஸ்லோ மோஷன் ஆக்ஷன் காட்சிகள். ஓப்பன் கிரவுண்டில், புழுதி பறக்க இந்த மூவர் கூட்டணி 100 பேரைச் சந்திக்கும் இடமெல்லாம் செம மாஸ் ஆக்ஷனாக இருக்கும்.
ஆக்ஷன் படப்பிரியர்கள் ஜாலியாக பார்த்து என்ஜாய் பண்ண வேண்டிய படம்.
பி.கு - இந்தப் படத்தில் Francis ஆக நடித்திருப்பவர் பிரபல பிரென்ச் பாடகரான Johnny Hallyday! ஆள் வயசானாலும் செம கெத்து!
RUNNING ON KARMA
Johnnie To & Wai Ka-Fai | Hong Kong | 2003
மீண்டும் ஒரு Johnnie To படம். ஆனால் இந்தப் படம் இவரது ஸ்பெஷாலிட்டியான கேங்ஸ்டர் வகை கிடையாது. Big ஒரு முன்னாள் துறவி. தனது தோழி ஒருத்தியின் கொலையாளியைக் கண்டுபிடிக்கப் போகும் இடத்தில், பிறரது முன்வினை பயன்களைக் (Karma) காணும் சக்தியைப் பெரும் 'Big', இனி தான் ஒரு துறவியாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு வெளியேறுகிறான். ஆஜானுபாகுவான உடல்வாகுவைக் கொண்ட 'Big', பாடி பில்டராகவும், ஒரு கிளப்பில் பகுதிநேர Stripper ஆகவும் வேலை செய்கிறான். ஒரு அதிரடி CID சோதனையால் இளம் பெண் அதிகாரியான Lee Fung-Yee ‘ஐ சந்திக்கிறான். அவளது கர்மாவைத் தெரிந்துகொள்ளும் லீ, அவள் மேல் பரிதாபம் கொண்டு அவளுக்கு உதவ நினைக்கிறான். லீ ‘யின் கேஸ்களில் அவளுக்குப் உதவியாக இருக்கிறான். ஒரு கட்டத்தில் தனது கர்மாவைத் தெரிந்துகொள்கிறாள் லீ. அதை மாற்ற ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கிறாள். அடுத்து என்ன நடந்தது என்பது தான் Running on Karma படத்தின் கதை.
முதலில் இந்தப் படத்தை பார்க்கத் தூண்டியது, ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’. இந்தப் படத்தை தான் ஷங்கர் ‘ஐ’ ஆக எடுக்கிறார் என்று ஒரு செய்தி வலம் வந்தது. ஆர்வத்தால் பார்த்து வைத்தேன். கூடவே இது Johnnie To படம் வேறு. ஆனால் படம் பார்த்த பின் தான் தெரிந்தது இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் குபேரனே பிச்சைக்காரன் ஆகிவிடுவான் என்று. காரணம் படத்தில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் ஹாங் காங் / புத்த மத நம்பிக்கைகளைப் பற்றியது. இவையெல்லாம் எப்படி மாற்றி எடுத்தாலும் தமிழுக்கு ஒத்துவராது.
படத்தில் Big ஆக நடித்திருப்பவர் புகழ்பெற்ற நடிகர் / பாடகரான Andy Lau (Infernal Affairs, House of Flying Daggers) சாதாரண உடல்வாகைக் கொண்ட இவர், Prosthetic Suit ஒன்றை அணிந்து பாடி பில்டராக இந்தப் படத்தில் நடித்துள்ளார். செம ஜாலியான மேக்-அப் அது. போலி என்று தெரிந்தாலும் பலசமயம் டக்கென்று பார்க்கும் பொழுது உண்மையாகத் தோன்றுமளவிற்கு சிறப்பாக செய்துள்ளனர் (?).
படத்தில் பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. ஹாங்காங்கின் அரசியல் சூழல், போலீஸ் செயல்படும் முறை, துறவிகளின் வாழ்க்கை / நம்பிக்கை, தனியொரு மனிதனின் உளவியல் பிரச்சனைகள், 'தான் யார்?' என்ற தேடல் என்று பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது படம். மார்ஸியல் ஆர்ட்ஸ் உண்டு, புத்தத் தத்துவங்கள் உண்டு, ரத்தம் தெரிக்கும் ஆக்ஷன் உண்டு, துப்பாக்கிச் சண்டை உண்டு, காமெடி உண்டு, காதல் உண்டு, சோகம் உண்டு, ஆன்மீகம் உண்டு. ஆனாலும் இது ஒரு மசாலா படம் (?) கிடையாது. மொத்தத்தில் எந்த மாதிரி படம் என்றே சொல்ல முடியாத, எல்லாம் கலந்த ஒரு வித்தியாசக் கலவை இந்தப் படம்.
இந்தப் படத்தை Johnnie To உடன் சேர்ந்து எடுத்திருப்பவர் Wai Ka-Fai. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களை இயக்கியுள்ளார்கள். பார்க்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்குமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பலரை ஈர்க்கும்.

DRUG WAR
Johnnie To | Hong Kong | 2013
ஹாங் காங்கின் புகழ்பெற்ற தயாரிப்பாளர் / இயக்குனர் ஜானி டொ (Johnnie To - Election, Vengeance, Blind Detective) இயக்கிய படம் Drug War (2012). கொஞ்சம் Usual Suspects, கொஞ்சம் நம் குருதிப்புனல் டைப் கதை. ஒரு மிகப்பெரிய போதை கும்பலின் தலைவன் டிம்மி (Timmy Choi) ஒரு விபத்தால் போலீஸில் சிக்கிவிடுகிறான். தப்பிக்க வழியில்லை என்று தெரியும் பொழுது தன் ஆட்களையும், சக போதைப் பொருள் ஜாம்பவாங்களையும் காட்டிக்கொடுக்க முன்வருகிறான். அதற்கு பதில் மரண தண்டையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான். அதன்படி ஜாங் (Zhang) என்ற போலீஸ் அதிகாரியுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஜகஜாலக்கில்லாடியான டிம்மிக்கும் விடாக்கன்டன் ஜாங்கிற்கும் நடக்கும் கேட் அண்ட் மௌஸ் துரத்தல் தான் 'டிரக் வார்'. அதிரடி சண்டைக்காட்சிகளை விரும்புபவர்கள் இந்தப் படத்தை தவற விடக்கூடாது. அதிரடி திருப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது. முக்கியமாக இறுதி 30 நிமிடங்கள் வரை நீளும் அந்த அதிரடி கிளைமாக்ஸ் உங்களை அசத்திவிடும். தவறவிட்டுவிடாதீர்கள்.
RUNNING OUT OF TIME
Johnnie To | Hong Kong | 1999 | 93 min.
Trailer - http://www.youtube.com/watch?v=t7W5YkM2DsU
Link - https://kickass.to/running-out-of-time-1999-720p-brrip-mrshanku-silver-rg-t5835443.html
Ho Sheung-Sang ஒரு போலீஸ் negotiator. சிக்கலான சமயங்களிலும் சாதூர்யமாகப் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் கில்லாடி. இவரை மறைமுகமாகக் கண்காணிக்கிறான் Cheung (Andy Lau). இவன் ஒரு கேன்சர் பேசண்ட். மருத்துவர்கள் 4 வாரங்கள் கெடு விதிக்கிறார்கள். அதற்குள் தான் முடிக்க நினைக்கும் வேலை ஒன்றை கச்சிதமாக முடிக்க ப்ளான் போடுகிறான். அதற்கு Ho வின் உதவி தேவைப்படுகிறது. ஒரு வங்கியை கொள்ளையடிப்பது போல் நடித்து Ho வை வரவழைக்கிறான். இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. கேட் – மௌஸ் கேம் ஆரம்பமாகிறது.
துப்பாக்கிச் சத்தம் அதிகம் கேட்காது என்றாலும், படத்தில் ஒரு ஸ்டைல் இருக்கும். Any Lau மேக்கப் போட்டு நடிப்பதில் நம் கமல் செட் என்பது அவரது படங்களைப் பார்த்தால் தெரியும். இதிலும் அவருக்கு அருமையான கெட்டப்கள் உண்டு. ஹீரோயின் கிடையாது. ஆனால் சில நிமிடங்களே வரும் ஒரு பெண் கதாப்பாத்திரத்திற்கும் Cheungற்கும் ஆன உணர்வு வெளிப்பாடுகள் மிக அருமையாக காட்டப்பட்டிருக்கும், ரயில் சிநேகம் போல. மனதை வருடும் அந்த இசைக்கோர்வையைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சின்ன படம். தொடங்குவதும் தெரியாது, முடிவதும் தெரியாது. தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.
THE MISSION
Johnnie To | Hong Kong | 1999 | 84 min.
Trailer – http://www.youtube.com/watch?v=G3kxSVO3gPE
Link – http://www.youtube.com/watch?v=kyMOUpC9qTY
இதுவும் ஒரு கேஸ்டர் படம்தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம். மாமூல் படங்களைப் போல ஒரேடியாகச் சுட்டுக்கொண்டே இருக்கமாட்டார்கள். ஆனால் அந்த ‘ஸ்டைல்’ படம் முழுக்க இருக்கும். அடிதடிகளை மட்டுமே காட்டாமல், கேங்ஸ்டர்கள் வாழ்க்கையில் ஒரு எப்பிஸோடை கொஞ்சம் டீடெய்லாகவே காட்டும் படம். படம் நெடுக வரும் அந்த 'தீம்' இசை 80களில் நிச்சயம் ஹிட் அடித்திருக்கும்.
Lung ஒரு கேங்ஸ்டர் லீடர் (Triad Boss). அவனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனது குழுவைத் தாண்டி வெளியிலிருந்து நம்பத் தகுந்த, திறைமையான ஐவரை (assassins / killers) வேலைக்கு அமர்த்துகிறான். தங்கள் உயிரைக் கொடுத்தாவது கொடுத்த வேலையைச் செய்பவர்கள் இவர்கள். இந்த ஐவரும் வந்து சேரும் விதம், அவர்களது பின்னணிகள், அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், இரண்டு மூன்று தருணங்களில் Lung தாக்கப்படும் போது இவர்கள் செயல்படும் விதம் என்று படம் ஆங்காங்கே வேகமும் ஆங்காங்கஏ கொஞ்சம் மெதுவாகவும் நகர்கிறது. Johnnie To வின் மற்ற படங்களை வைத்துப் பார்க்கும் போது இந்தப் படம் கொஞ்சம் ஸ்லோ + ஆக்ஷன் கம்மி. ஆனாலும் அமெரிக்க ரீமேக்கிற்கு உரிமை வாங்கி வைத்திருக்கும் அளவிற்கு சிறந்த படமாகக் கருதப்படுகிறது. ஒரு முறை பார்க்கலாம் அல்லது தவிர்க்கலாம்.
MAD DETECTIVE
Johnnie To & Wai Ka-Fai | Hong Kong | 2007 | 89 min.
Trailer – http://www.youtube.com/watch?v=eaPsh0qh1To
Full movie with ESubs – http://www.youtube.com/watch?v=Kg4Zr6ymiJA
Johnnie To வின் மற்ற படங்களைப் பற்றிக் கூடத் தெரியாதவர் இருக்க முடியும்; ஆனால் Mad Detective படத்தைத் தெரியாதவர் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இணையத்தில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் படமிது.
Chan Kwai-Bun ஒரு டிடெக்டெவ். இவனுக்கென்று சில விஷேச சக்திகள் உண்டு. ஒருவரது inner personalities களைக் காணும் திறன் இவருக்கு இருக்கிறது. அதாவது தனியொரு மனிதனை நல்லவனாக, கெட்டவனாக, புத்திசாலியாக, பலசாலியாக, குரூரனாக என்று இவரால் பிரித்துப் பிரித்து ஒரே சமயத்தில் பார்க்க முடியும். அந்த inner characters எல்லாம் இவர் பார்க்கும் ஆளைச் சுற்றி நின்று கொண்டு அவனை ஆட்டுவிப்பதை இவரால் பார்க்க முடியும். இப்படி பட்ட ஒரு விநோதத் திறன் இருப்பதாலோ என்னவோ, ஆள் ஒருமாதிரி மென்டலாக இருப்பார். தனக்கு மிகவும் பிடித்த உயரதிகாரியின் கடைசி நாளில், பரிசாக தன் காதை Chan Kwai-Bun அறுத்துத் தருவதிலிருந்து தான் படமே தொடங்குகிறது. 18 மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருப்பவனைத் தேடி ஒரு இளம் போலீஸ் அதிகாரி வருகிறான். Chan Kwai-Bun இன் திறமை, பிரச்சனைகளை அறிந்த அவன், காணாமல் போன தனது பார்ட்னரைத் தேடித் தரச் சொல்லிக் கேட்கிறான். மீண்டும் களத்தில் குதிக்கிறான் Chan Kwai-Bun. என்ன ஆனது என்பது தான் கதை.
டம் டம் என்று சுட்டுக் கொண்டிருக்கும் கேங்ஸ்டர் படங்களுக்கு மட்டுமல்ல ஆன்மீகம், ஆத்மா, மோட்சம் போன்ற 'கேங்ஸ்டர்' ஏரியாவிற்குச் சம்பந்தமில்லாத டிராக்கிலும் சில சமயம் பயணிப்பார் Johnnie To. அப்படி இதற்கு முன் நாம் பார்த்த படம் Running on Karma. துறவியாக இருக்கத் தகுதியில்லை என்று stripper ஆக மாறிய பௌதத்துறவிதான் அந்தப் படத்தின் ஹீரோ. இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் Wai Ka-Fai என்பவருடன் சேர்ந்து தான் இயக்கியிருக்கிறார் Johnnie To. Milkyway Image Productions என்ற தயாரிப்புக் கம்பனி இவ்விருவர்களுடையது தான். Mad Detective படமும் உள்ளம் சார்ந்த பல தத்துவங்களை வீசியெறியக்கூடிய படம் தான் என்றாலும் (அது நமக்கு எங்க புரியப்போகுது) ஆக்ஷன், வயலன்ஸிற்குப் பஞ்சமிருக்காது.
லூசு டிடெக்டிவாக மாஸ் காட்டியிருப்பார் ஹாங்காங்கின் பிரபல நடிகரான Lau Ching-Wan (Overheard, The Bullet Vanishes, Life Without Principle).
வித்தியாசமான கதை சொல்லல் முறை, கதாப்பாத்திர வடிவமைப்பிற்காகவாவது நிச்சயம் ஒருமுறை பார்க்கப்பட வேண்டிய படம்.

0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...