2013 தமிழ் சினிமா - பெஸ்ட், வொர்ஸ்ட், Ok 10 படங்கள்

8:20:00 AM

2013 ஆம் ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்க வேண்டிய 2014 ஆம் ஆண்டின் முதல் பதிவாக உள்ளது. அதனால் என்ன, பரவாயில்லை.

சென்ற வெளியான படங்களில் அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, சமர், கடல், டேவிட், விஸ்வரூபம், வனயுத்தம், ஆதி-பகவன், ஹரிதாஸ், பரதேசி, வத்திக்குச்சி, சென்னையில் ஒரு நாள், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சேட்டை, கெளரவம், உதயம் NH4, நான் ராஜாவாகப் போகிறேன், யாருடா மகேஷ், எதிர்நீச்சல், மூன்று பேர் மூன்று காதல், சூது கவ்வும், நாகராஜ சோழன் M.A M.L.A, நேரம், குட்டிபுலி, தீயா வேல செய்யணும் குமாரு, தில்லு முல்லு, சிங்கம் II, மரியான், பட்டத்து யானை, சொன்னா புரியாது, 555, ஆதலால் காதல் செய்வீர், தலைவா, தேசிங்குராஜா, தங்கமீன்கள், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மூடர்கூடம், 6 மெழுகுவர்த்திகள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ராஜா ராணி, இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வணக்கம் சென்னை, சுட்ட கதை, ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டியநாடு, பிட்ஸா II, இரண்டாம் உலகம், விடியும் முன், தகராறு, இவன் வேற மாதிரி, பிரியாணி, என்றென்றும் புன்னகை, கல்யாண சமையல் சாதம் ஆகிய படங்களைக் கண்டுள்ளேன். 95% தியேட்டரில் தான் பார்த்தேன். சில படங்கள் பெங்களூரில் வெளியாகவில்லை என்பது தான் பிரதான காரணம்.

ஓ.கே முதலில் நான் பார்த்த படங்களில் டாப் 10 படங்களைச் சொல்லிவிடுகிறேன்.

10) 6 மெழுகுவர்த்திகள்
மையக்கதை மிகவும் சிம்பிளாக இருந்தாலும், கதையை கொண்ட்டு சென்ற விதம், கொடுத்திருக்கும் உழைப்பு அபாரமானது. பல இடங்களில் இதயம் கனத்து கண்களில் நீர் கோர்த்தது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடுத்திருந்தால் படம் படு கிளாஸாக இருந்திருக்கும்.

9) பாண்டிய நாடு
நரம்பு புடைக்க, கண்கள் சிவக்க எத்ரிகளை பறக்க விட்டுக்கொண்டிருந்த விஷால் அடக்கி வாசித்திருந்த படம். சுசீந்திரன் கதைக்காகவெல்லாம் ரொம்ப மெனக்கெடவில்லை. தனது முந்தைய படமான நான் மகான் அல்ல டைப் கதையையே கொஞ்சம் பட்டி டிங்கடிங் பார்த்து ஜெயித்து விட்டார்.

8) ஆதலால் காதல் செய்வீர்
முதல் பாதியில் பார்த்து சலித்துப் போன பருவ வயதுக்காதலைச் சொன்ன சுசீந்திரன், இரண்டாம் பாதியில் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார். யதார்த்தமாக, உண்மையாக இருந்தது படம். இவ்வளவு பொருத்தமான கிளைமாக்ஸை நான் எந்த சமீபத்திய படத்திலும் காணவில்லை.

7) ஹரிதாஸ்
என்கவுன்டர் போலீஸ் அதிகாரி ஒரு பக்கமும், பாசமுள்ள தந்தை ஒரு பக்கமும் வெவ்வேறு தளத்தில் பயணிக்கும் கதை. இரண்டு சம்பந்தமில்லாத டிராக்குகளை எந்த வித சமரசமும் இல்லாமல் தெளிவாகக் கொடுத்திருந்தார் இயக்குனர் குமாரவேலன்

6) கல்யாண சமையல் சாதம்
இந்த வருடம் நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம் இது. எடுத்துக்கொண்ட கதைக்கு, வகைக்கு (Genre) ஏற்ற ஸ்கிரிப்ட். இயக்குனர் பிரசன்னாவும், நடிகர் பிரசன்னாவும் கலக்கியிருக்கிறார்கள். தரம்கெட்ட காமெடி படங்களுக்கு மத்தியில் இந்த அர்பன் காமெடி மிகவும் கவர்ந்தது

5) சிங்கம் II
முகப்புத்தகத்தில் நான் எழுதிய விமர்சனத்தையே இங்கும் பகிர்கிறேன்.

// பெங்களூரு பனசங்கரி ஏரியாவில் "சிவாஜி மிலிட்டரிஎன்று ஒரு ஹோட்டல் இருக்கிறதுபல வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் சிவாஜிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாதுபிரியாணி மட்டும் தான் ஸ்பெஷல்உடன் சிக்கன் சாப்ஸ்மட்டன் சுக்கா என்று ஒன்றிரண்டு சைடு அயிட்டங்கள் கிடைக்கும்ஆலமர இலையில் செய்த கோப்பையில் பிரியாணியை வைத்துத் தருவார்கள். "தொன்னை பிரியாணிஎன்பது அதன் பெயர்.

காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை திறந்திருக்கும் சிவாஜி மிலிட்டரிக்கு எவ்வளவு சீக்கிரம் போனாலும் கூட்டமாகத்தான் இருக்கும்பார்சலாக இருந்தாலும் காத்திருந்து தான் வாங்க வேண்டும்எப்படிப் பார்த்தாலும் நம் இலைக்கு பிரியாணி வர குறைந்தது 20வதிலிருந்து 30 நிமிடங்கள் வரை ஆகும். "லக்இருந்தால் மட்டும் தான் நாம் போகும் நேரத்தில் மட்டன் பிரியாணி இருக்கும்முதல் மாடியில் இருக்கும் சிவாஜி மிலிட்டரியின் பிரியாணி வாசனை படி ஏறும் போதே மூக்கைத் துளைக்கும்பசியுடம் உள்ளே நுழைந்தால் கூட்டம் குமுறும்கூட்டத்தைப் பார்த்து "சரி வேண்டாம் போய்ரலாம்என்று முடிவெடுத்தவனை இதுவரை நான் பார்த்ததில்லைஒரு மணி நேரமானாலும் காத்திருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போகத் தோன்றும்நான்கு வரிசையில் இருக்கைகள் இருக்கும்மொத்தமாக 100 பேர் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்வரிசைக்கு ஒரு சர்வர்பிரியாணி ரெடி ஆக ரெடி ஆக சுடச் சுட கிச்சனிலிருந்து அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்மிகப்பெரிய ஒரு தாம்பூலத்தில் மொத்தமாக பிரியாணிசாப்ஸை எடுத்துக்கொண்டு தங்களது வரிசைக்கு சப்ளை செய்வார்கள்தலைகீழாக நின்றாலும் அடுத்த வரிசையில் காத்திருப்பவர்களுக்கு பிரியாணி கிடைக்காதுஆகஎப்படிப் பார்த்தாலும் ஒரே சமயத்தில் அதிகபட்சம் மூன்று வரிசை ஆட்கள் தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்ஒரு வரிசை ஆட்கள் காத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்முதல் வரிசை முடியும் நேரத்தில் நான்காம் வரிசை ஆட்கள் சாப்பிட ஆரம்பித்திருப்பார்கள்முதல் வரிசையில் அடுத்து வந்து அமர்பவர்கள் அடுத்து சாப்பிட எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்பிரியாணி வாசனை மூக்கை துளைக்க நாம் காத்திருக்கும் அந்த நிமிடங்களில் சர்வமும் மறந்து போய் பசி மட்டும் தான் நம் கண்களில் இருக்கும்தாம்பூலம் நிறைய பிரியாணிகளை எடுத்து வரும் சர்வரை நாம்  ஏதோ தேவ தூதன் ரேஞ்சிற்கு எதிர்பார்த்துக் காத்திருப்போம்அதிலும் மட்டன் பிரியாணி கிடைத்துவிட்டால் நாம் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்ற எண்ணம் ஏற்படும்பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது எத்தனை சரியான பழமொழி என்பதை நான் உணர்ந்ததே சிவாஜியில் தான்சாப்பிடுவதற்கு முன் "எங்கே நமக்கு பிரியாணி கிடைக்காமல் போய்விடுமோஎன்று ஒவ்வொருவரும் பதறுவதை பல முறை பார்த்திருக்கிறேன்நாகரிகம்படிப்புசம்பாத்தியம் - இதெல்லாம் "கிலோ என்ன விலைஎன்று கேட்பார்கள்தங்கள் வரிசைக்கு எப்பொழுது பிரியாணி வரும் என்று சர்வரிடம் ஒரு முறையாவது கேட்காத ஆள் இதுவரை இல்லைஇவ்வளவு ஏன் ஒரு முறை நானும் என் மாமாவும் இடம் இல்லாமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து சாப்பிட அமர்திருந்த 40 வயதைத் தாண்டிய நண்பர்கள் எங்களை அழைத்து (கன்னடத்தில்) "சார்அங்க ஒரு சேர் காலியா இருக்கு பாருங்கஎடுத்துட்டு வந்து இங்க எங்க கூட உட்காந்துகோங்க... பாதுக்கலாம்என்று இடம் கூடக் கொடுத்திருக்கிறார்கள்இதே ஆட்கள் ரோட்டில் நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் திரும்பிப் பார்ப்பார்களா என்பதுகூட சந்தேகம்.

ஒருவழியாகசுடச்சுட நம் இலையில் வைக்கப்படும் பிரியாணி சரியாக 10 நிமிடங்களுக்குள் காணாமல் போய்விடும். "ருசிஎன்பது மிகச்சரியான அர்த்தமாக அந்த தொன்னை பிரியாணி இருக்கும். "திருப்திஎன்பது பிரியாணியை சாப்பிட்டு விட்டு அங்கிருக்கும் சோம்பைக் கொஞ்சம் கையில் அள்ளி வாயில் போடும்போது ஏற்படும்தொடர்ந்து மூன்று வருடங்களாக நான் சிவாஜியில் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்மாதம் இரு முறையாவதுஇங்கு சொன்ன எதையும் நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லைஅத்தனையும் உண்மைஎன் அனுபவம்.

அப்படியாப்பட்ட சிவாஜி மிலிட்டரியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்சல் வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்தோம்ஏதோ காரணத்தால் சாப்பிடுவதற்கு கொஞ்சம் லேட் ஆகிவிட்டதுநேரம் அதிகமானதால் பசி போய் கிறக்கம் தான் இருந்ததுபிரியாணியை பிரித்து சாப்பிட ஆரம்பித்தால்...

கன்றாவியாக இருந்தது சிவாஜி மிலிட்டரி தொன்னை பிரியாணி!

அப்பொழுது தான் தெரிந்தது சிவாஜி மிலிட்டரியின் ஸ்பெஷல் அந்த பிரியாணி அல்லஅந்த இடமும்இடத்தின் வாசமும்கூட்டமும்கூட்டத்தின் மனநிலையும்முக்கியமாக அந்த 20 - 30 நிமிட காத்திருப்பும் தான் என்றுவீட்டில் வாங்கி வைத்து சாப்பிட்டுப் பார்த்து நன்றாக இல்லை என்பதற்காக நான் அடுத்து அங்கு செல்லவே மாட்டேன் என்றா அர்த்தம்இல்லையேஇன்று மதிய சாப்பாடு சிவாஜியில் தான் என்று காலை எழுந்தவுடன் முடிவு செய்யப்பட்டு விட்டது.

சிவாஜி மிலிட்டரியில் போய் பிரியாணி சாப்பிடுவது போல் தான் தியேட்டரில் போய் "சிங்கம் 2" படம் பார்ப்பதும்இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

மிஸ் பண்ணிடாதீங்கலே...//

4) சூது கவ்வும்
டிக்கெட் விற்கும் விலையில் பெங்களூர் தியேட்டரிலேயே இரண்டு முறை பார்த்த படம். ஒரிஜினல் டி.வி.டியும் வைத்துள்ளேன். இந்த வருடம் என்னை மிகவும் திருப்தி படுத்திய படங்களில் இதற்குத் தான் முதல் இடம்.

3) ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
முகமூடி எடுத்து தன் பெயரைக் கெடுத்துக்கொண்ட மிஷ்கின் அதை ஈடுகட்ட கொடுத்த மிகவும் சிம்பிளான ஆனால் அற்புதமான படம். அலைந்து திரிந்து ரசித்துப் பார்த்த படம். ஓ.ஆ வெளியான பொழுது நான் எழுதிய கட்டுரை - மிஷ்கின் எனும் ஒரு தனித்த ஓநாய் - A tribute to the Master...


2) பரதேசி
"பாலா படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும். அதற்கெல்லாம் நான் அசரப்போவதில்லை" என்று தயாராகப் போனாலும் இதயம் கனத்து, அழுதுகொண்டு வந்த படம் பரதேசி. நாம் வாழும் இந்த வாழ்க்கை எத்தனை அருமையானது, அதை வாழ நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் பாலா சொல்கிறார். பரதேசி படம் பார்த்ததிலிருந்து ஏனோ தெரியவில்லை நான் தேநீர் அருந்துவதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.

1) விஸ்வரூபம்
“ஹாலிவுட்டிற்கு இணையாக” என்று தான் இன்று வரை நாம் நமது தமிழ் சினிமா தரத்தின் அளவை வைத்துள்ளோம். அந்த தரத்தை எட்டி என்னை பிரம்மிக்க வைத்த படம் விஸ்வரூபம். இயக்குனர் கமலு என்ற அளவீட்டில் சாதாரண படமாக இருந்தாலும் கூட இந்த வருடத்தில் என்னை அசத்திய படம் விஸ்வரூபம் தான்.

இப்பொழுது ஏன்டா பார்த்தோம் என்று நான் வெறுத்த வொர்ஸ்ட் 10 படங்கள். இதற்கு விளக்கமெல்லாம் கொடுக்க விரும்பவில்லை. அவசியமில்லை என்பது என் கருத்து.

அலெக்ஸ் பாண்டியன்
சுட்டகதை
அழகுராஜா
ஆதிபகவன்
நாகராஜசோழன் MA MLA
சேட்டை
பட்டத்துயானை
யாருடா மகேஷ்
கண்ணா லட்டு தின்ன ஆசையா
கடல் / டேவிட்

பரவாயில்லை என்று நான் நினைத்த, கொஞ்சம் மிஸ் ஆகி பெஸ்ட் 10ல் இடம் பிடிக்காத Ok 10 படங்கள்.

மூடர் கூடம்
எதிர்நீச்சல்
தீயா வேலை செய்யனும் குமாரு
தேசிங்குராஜா
வருதப்படாத வாலிபர் சங்கம்
ராஜா ராணி
ஆரம்பம்
பிரியாணி
என்றென்றும் புன்னகை
தகராறு

எதற்கு தலைவலி என்று நான் பார்க்காமல் விட்ட படங்களும் உண்டு.

மதில் மேல் பூனை
ஒன்பதுல குரு
சுண்டாட்டம்
கருப்பம்படி
மறந்தேன் மன்னித்தேன்
மாசாணி
அன்னக்கொடி
துள்ளி விளையாடு
சும்மா நச்சுன்னு இருக்கு
ஆர்யா சூர்யா
யா யா
நையாண்டி
ரகளபுரம்
நவீன சரஸ்வதி சபதம்

பார்க்காமல் விட்ட ஆனால் நிச்சயம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிற படங்களும் உண்டு.

பொன்மாலை பொழுது
ராவண தேசம்
ஜன்னல் ஓரம்
தலைமுறைகள்
மதயானைக்கூட்டம்
விழா

கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் தரமான படங்கள் சிலவும் மகாமட்டமான படங்கள் பலவும் வந்து நம்மை மகிழ்விக்கும் என்று நம்புவோம்.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

You Might Also Like

9 comments

  1. ஆஹா.. பெங்களூர்லயே ஒரு வருஷமா இருந்தாலும் சிவாஜி மிலிட்டரி பத்து தெரிஞ்சுக்காம விட்டுட்டேனே..!! நீங்க சொல்றபோதே நாக்குல எச்சி ஊறுது.. கண்டிப்பா வீக் எண்ட் அங்கதான் பிரியாணி..!!

    நல்ல லிஸ்ட்டு தல.. ஒன்னு ரெண்டு படங்கள தவிர மத்தபடி எனக்கும் இதே டேஸ்டு தான்.. :)

    ReplyDelete
  2. சிவாஜி பிரியாணி பற்றிய பத்தி கொஞ்சம் லென்தியாக போய்விட்டாலும் நான் ஏற்கனவே படிக்கவில்லை என்பதால் ரசிக்க வைத்தது... இப்ப எனக்கு சிங்கம் டூ படத்தை விட சிவாஜி பிரியாணியின் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது....

    6 மெழுகுவர்த்திகள் கதை என்ன என்று தெரிந்துவிட்டதால் பார்க்கும் ஆர்வம் சுத்தமாக போய்விட்டது... FYI, லத்திகா, பாரசீக மன்னன் நான் பார்த்த இரண்டு மொக்கைப்படங்கள் இதே கதை தான்... ஆங்கிலத்தில் கூட butterfly on wheels, taken இரண்டும் இதே கதை என்று நினைக்கிறேன்...

    பாண்டிய நாடு படமும் பார்க்கவில்லை... After all ஆக்ஷன் படம்தானே என்ற மெத்தனம்...

    உங்களுடைய வொர்ஸ்ட் பத்து லிஸ்டில் சுட்ட கதை அவ்வளவு ஒன்றும் மோசமில்லை... க.ல.தி.ஆ எனக்குப் பிடித்திருந்தது...

    தலைவலி என தவறவிடப்பட்ட படங்களில் சுண்டாட்டம், நவீன சரஸ்வதி சபதம் பார்க்கலாம்...

    பார்க்காமல் தவற விட்ட படங்களில் பொன்மாலை பொழுது, ராவண தேசம், தலைமுறைகள் மூன்றிற்கும் ப்ரையாரிட்டி கொடுத்துப் பார்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. பிரபா 6 மெழுகுவர்த்திகள் கண்டிப்பாக பார்க்கவும்.நானும் கதை தெரிந்துதான் பார்த்தேன்.கதை தெரிந்தாலும் படத்தின் மேகிங் கண்ணீரை வரவைக்கும்.பாண்டி நாடும் பார்க்க கூடிய வகையில் உள்ள படம்தான்.

      Delete
  3. ///பொன்மாலை பொழுது
    ராவண தேசம்
    ஜன்னல் ஓரம்
    தலைமுறைகள்
    மதயானைக்கூட்டம்
    விழா/// இந்தப்படங்களை கட்டாயம் பார்த்து விடுங்கள்.
    இயக்குனர் எங்கே தவறு செய்து உள்ளார் என கண்டு பிடியுங்கள்.
    இந்த படங்களில் இருக்கும் தவறுகளை தவிர்க்க பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
    அந்த பயிற்சியின் மூலம் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்..

    ReplyDelete
  4. உங்களின் பட்டியலே தனி...! நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. சிங்கம் 2 தவிர மற்ற படங்கள் என் லிஸ்டிலும் உள்ளது.என்ன சில படங்கள் என் சுமார் லிஸ்டில் உள்ளது.
    -- என் லிஸ்ட் http://scenecreator.blogspot.in/2014/01/2013.html

    ReplyDelete
  7. dnt try jannal oram ...coz yesterday tried....it become worst time fr me.....

    ReplyDelete
  8. biriyani ok for you? worst movie of venkat prabhu!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...