முகப்புத்தகத்தில் எழுதத் தொடங்கியதிலிருந்து Blog பக்கம் அதிகம் நான் வருவதில்லை என்ற வருத்தம் என்னைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கும், எனக்கும் உண்டு. Short and Sweet ஆக ஒருசில வரிகளில் ஒரு படத்தை அறிமுகம் செய்வது சுலபமாக இருப்பதால் FBயியே தங்கிவிட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பதும் மற்றொரு காரணம். இப்படியே விட்டால் கஷ்டப்பட்டு வளர்த்த எனது இந்தப் பக்கம் மறந்துவிடும் என்பதால், அங்கு எழுதிய சில படங்களையே இங்கும் பரிந்துரைக்கிறேன். டாரெண்ட் லின்க்-கள் இருப்பதால் நண்பர்கள் இந்தப் படங்களை தரவிறக்கிப் பார்த்து மகிழலாம். அதிகம் எழுத வேண்டிய, விவாதிக்க வேண்டிய கருத்துக்கள் ஏதாவது இருந்தால் நிச்சயம் அது Blogல் மட்டுமே எழுதப்படும்.
உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
எனது முகப்புத்தகப் பக்கம் - https://www.facebook.com/pages/Pfools-movie-recommendations/233998196650340

Bang Eun-jin | South Korea | 2012 | 107 min.
தியாகம், விட்டுக்கொடுத்தல், எங்கிருந்தாலும் வாழ்க காதல்களெல்லாம் ஒரு ருபாய் நாணயம் போல கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் உண்மைக்காதலின் வலி, அதற்கிருக்கும் சக்தி, அது நிகழ்த்தக்கூடிய அற்புதங்களை அழகாக, ஆழமாகப் பிரதிபலிக்கிறது இந்தப் படம்.
பீயில் ஈ மொய்ப்பது போல் இன்று பெருகிவிட்ட “காதல்”களுக்கு மத்தியில், ‘இதயம்’ முரளி போல தன் காதலை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து உருகும் ஒரு கணித ஆசிரியரின் கதை Perfect Number. Kim Seok-go யாரிடமும் அதிகம் பழகாத, தனிமையும் கணிதமுமே துணையாகக் கொண்ட ஒரு பள்ளி ஆசிரியர். அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் Baek Hwa-sun. பருவ வயது மகளுடன் (அக்காள் மகள்) வசித்து வருகிறார். Baek வேலை செய்யும் ரெஸ்டாரன்ட்டில் தான் தினமும் தனது மதிய உணவை வாங்குகிறார் Kim. Baek ‘ஐ அவர் சந்திக்கும் அந்த ஒருசில நிமிடங்களை தனது நாளின் மிக முக்கிய தருணங்களாகக் கருதுகிறார் Kim. Baek‘ன் முன்னாள் கணவன் ஒரு நாள் அவளது வீட்டிற்கு வந்து அவளை அடித்து, ஆர்பாட்டம் செய்ய, தன்னையும் தன் மகளையும் காப்பாற்றிக்கொள்ள Baek அவனை பலமாகத் தாக்க, அந்த இடத்திலேயே இறந்துவிடுகிறான் அந்த கம்னாட்டி. சத்தம் கேட்டு உள்ளே வரும் இவர்களுக்கு Kim, இவர்களுக்கு உதவ முன்வருகிறான். என்ன நடந்தது, Kim என்ன செய்தான், ஏன் செய்தான், முடிவு என்ன ஆனது என்பது தான் கதை.
The Berlin File படத்தில் வில்லனாக மிரட்டிய Ryoo Seung-bum இந்தப் படத்தில் அம்மாஞ்சி அம்பியாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தக் கதைதான் மலையாள பேமஸ் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ஒரிஜினல் என்று பரவலாகப் பேசப்பட்டது. கதைக்கரு ஒன்றாகத் தெரிந்தாலும், திரைக்கதை, சூழ்நிலைகள், கதாப்பாத்திரப் படைப்பு என்று அனைத்தும் வேறு வேறு. இந்த திரைப்படம் The Devotion of Suspect X என்ற புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் முதலில் 2008 ஆம் ஆண்டு Suspect X என்ற பெயரில் ஜப்பானில் எடுக்கப்பட்டு, பின்னர் 2012ல் கொரியாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஹிந்தியிலும் (முறைப்படி ரைட்ஸ் வாங்கி) இந்தப் படத்தை எடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. அதில் Vidya Balan, Naseeruddin Shah, Parambrata Chatterjee, Nawazuddin Siddiqui போன்ற பெரிய தலைகளின் பெயர்கள் அடிபடுகிறது. வந்தால் அருமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. த்ரிஷ்யம் உங்களுக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கும்.
Perfect Number is about a mild-mannered Mathematics professor who plans the perfect alibi for the woman he secretly loves when she unexpectedly murders her abusive ex-husband (wiki). Don’t miss it if you liked ‘Drishyam’ which was rumored to be inspired by this movie.
Trailer - https://www.youtube.com/
Link - http://

Park Kwang-hyun | South Korea | 2005
தென் கொரியாவும் வடகொரியாவும் சண்டையிட்டுக்கொண்டிருக்கும
War Genre படங்களில் Anti-War என்ற Sub-Genre உண்டு. எந்தப் படமும் “போர் நல்லது” என்று சொல்லப்போவதில்லை என்பதால் பெரும்பாலான படங்கள் இந்த Anti-War வகையில் தான் இருக்கும். மிகசீரியஸாகவே எடுக்கப்படும் இந்த மாதிரியான படங்களுக்கு மத்தியில் ஒரு சில படங்கள் நகைச்சுவை கலந்த மென்மையான படங்களாக இருக்கும். இறுதியில் போரின் துயரம் தாக்குவது போல் தான் கதை இருக்கும் என்றாலும் அந்த முடிவு வரக்கூடாது என்று நம்மை ஏங்க வைப்பதாக இருக்கும் படம். உதாரணம் – J.S.A. ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிந்தாலும், அந்த வீரர்கள் அடிக்கும் லூட்டியை நாம் படம் நெடுக ரசித்துக்கொண்டுதான் இருப்போம். என்ன நடந்தது என்று நமக்குத் தெரியவரும்பொழுது அந்தச் சம்பவத்தின் பாதிப்பு பெரிதாக இருப்பதற்கு இந்த மாதிரியான கதையமைப்பே காரணம். அப்படிப் பட்ட ஒரு பாதிப்பைத் தரக் கூடிய படம் தான் இது.
அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல தென்கொரியாவில் நாம் பார்த்தே தீர வேண்டிய படங்கள் மிக அதிகமாக இருக்கிறது. நீங்கள் இன்னும் பார்க்காத தென்கொரியப் படங்கள் பட்டியலில் இந்தப் படமும் இருந்தால், மற்ற படங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு உடனே இந்தப் படத்தை பார்த்து விடுங்கள்.
Film about 3 North Korean soldiers, 2 South Korean and a U.S Navy Soldier who are forced to stay in a village in the top of the kills whose residents know nothing about war or modern weapons. Best Anti-War movie from South Korea - Not to be missed!
Trailer - https://www.youtube.com/
Link - http://

Jang Hoon | South Korea | 2008 | 113 min.
கேங்ஸ்டர் – இப்படி எழுதி எழுதி எனக்கே அலுப்பு தட்டிவிட்டது. ஆனாலும் என்ன செய்ய? கொரியர்கள் இதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களே! இதுவும் மற்றுமொரு ஸ்டைலிஷ், கோட்சூட் அணிந்து சண்டையிடும் கொரியன் கேங்ஸ்டர் படம். ஆனால் மற்ற படங்களைப் போல் இல்லாமல், இதில் சுவாரஸ்யமான இன்னொரு கதை இருக்கிறது.
Gang-pae ஒரு கேங்ஸ்டர். சிறிய கும்பல் ஒன்றிற்குத் தலைவன். எதற்கும் அஞ்சாதவன். சினிமா பிரியன். இவனது பாஸ் சிக்கலான ஒரு கொலை கேஸில் மாட்டி உள்ளே இருக்கிறான். Soo-ta ஒரு கெத்தான ஆக்ஷன் ஹீரோ. தான் ஒரு நடிகன், அதிலும் வெற்றி நாயகன் என்பதில் அவனுக்கு கர்வம் அதிகம். சண்டைக்காட்சிகளில் நடிக்கும் பொழுது உடன் நடிக்கும் நடிகர்களை சில சமயம் உண்மையாக அடி பின்னி எடுத்துவிடுவதால், இவனது புதிய கேங்ஸ்டர் படத்தில் உடன் நடிக்க மற்ற நடிகர்கள் தயங்குகிறார்கள். ஒரு சின்ன பிரச்சனையில் நாயகனுக்கு ரௌடி பழக்கமாக, இருவரும் சேர்ந்து அந்தப் படத்தில் நடிக்கத் தொடங்குகிறார்கள். என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.
ரௌடி மீது நடிகனுக்கு வெறுப்பு, நடிகன் மீது ரௌடிக்கு வெறுப்பு. ஆனாலும் வேறு வழியில்லாமல் ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்கையில், குணத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் படம். Gang-pae ஆக நடித்திருப்பவர் A Company Man (2012) புகழ் So Ji-sub.
படத்தின் இயக்குனர் எனது All time favorite WAR movie ஆன THE FRONT LINE (2011) படத்தை இயக்கிய Jang Hoon. இவரது முதல் படம் இது. இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பவர் இயக்குனரது குருவான Kim Ki-duk. படத்தில் குருவின் ‘தாக்கம்’ தெரியாமல் இருப்பது இயக்குனரது பங்களிப்பைக் காட்டுகிறது.
இந்தப் படத்தைப் பற்றி இப்பொழுது சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ஆனாலும் நமது “அந்த” படத்திற்கும் கொரியர்களின் இந்தப் படத்திற்கும் சம்பந்தம் கிடையாது. சில ஒற்றுமைகள் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் ஒரு பெருட்டே அல்ல.
As usual, அவசியம் பார்க்க வேண்டிய கொரியன் கேங்ஸ்டர் படம்.
Story of a arrogant actor who hires a real gangster to play opposite him in a gangster movie. Things are not the same for both after their decision. Another MUST WATCH Korean gangster movie.
Trailer – https://www.youtube.com/
Link – http://

Kim Byung-woo | South Korea | 2013 | 98 min.
“ஒரு போன் கால், என் வாழ்க்கையே புரட்டிப் போட்டுடுச்சு” – பலர் இப்படிச் சொல்லிக் கேட்டிருப்போம். அப்படி ஒரு கதை தான் The Terror Live.
வேலையில் ஏற்பட்ட சிறிய குழப்பத்தால், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, விவாகரத்தாகி, ப்ரைம் டைமில் செய்தி வாசிப்பாளராக இருந்த Yoon Young-hwa இப்போது தினச் செய்திகளை எழுதி வைத்து வாசிக்கும் ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறான். அசுவாரஸ்யமான இவனது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது ஒரு போன் கால். தென்கொரியாவின் Han நதியின் மேலே செல்லும் Mapo பாலத்தை குண்டு வைத்து தகர்த்தப்போவதாக ஒரு போன் வருகிறது. “யார்ரா இவன் காலங்காத்தால லூசுக்கூ...” என்று நினைத்தபடி “தாராளமா செய். ஆல் த பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறான் Yoon. பாலத்தின் ஒரு பகுதி பெரும் சத்தத்துடன் இடிந்து விழுகிறது. ஆரம்பமாகிறது ஆட்டம்.
சீட்டின் நுனியில் நகத்தைக் கடித்துக்கொண்டே அமர்ந்து, ஒரு நொடிகூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் தலையைத் திருப்பாமல் ஒரு படம் பார்க்க வேண்டுமானால், இந்த படம் ஒரு அருமையான சாய்ஸ். லைவ் புரோகிராமில் தீவிரவாதம். நைஸ் கான்செப்ட். டி.ஆர்.பி காக சேனல் கேம் ஆட, மானம் காக்க கவர்ன்மென்ட் ஒருபக்கம் ஆட நடுவில் போன் தீவிரவாதியைச் சாமாளிக்க வேண்டும். சாதாரண சைக்கோ கொலைகாரன் என்று நினைத்தால், இவன் பல நாட்கள் பக்காவாக பிளான் செய்து இப்போது பழிவாங்கும் ஒரு காமன்-மேனாக இருக்கிறான். அடுத்து என்ன செய்ய போகிறான், அவனது நோக்கம் தான் என்ன என்று தெரியவருவதர்குள்ளாகவே பல சம்வங்கள் வரிசையாக நடந்துவிடுகிறது. அசரடிக்கும் கிளைமாக்ஸுடன் திருப்தியாக முடிகிறது படம்.
பரபர த்ரில்லர்களை விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய படம்.
One phone call changes the life of Young-Hwa Yoon, once a top national news anchor who wants to get his title back through an exclusive live broadcast with a terrorist who bombs the Mapo Bridge. MUST WATCH for thriller lovers.
Trailer - https://www.youtube.com/
Link – http://kickass.to/

Lee Han | South Korea | 2007 | 111 min.
மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ராஜா தனது வயலினையும், ரஹ்மான் தனது கீ-போர்டையும் விடாமல் வாசித்துக்கொண்டிருக்கிறார்
இப்படியொரு அருமையான காதல் திரைப்படத்தைக் கண்டு பலவருடங்கள் ஆகிவிட்டது. அப்பா / அம்மா / நண்பன் சென்டிமென்ட், வில்லன், ஆக்ஷன் – ம்ஹும் மருந்துக்கு கூட எதுவும் இல்லை. படம் முழுவதும் காதல், காதல் தவிர வேறொன்றும் இல்லை.
மூன்று ஜோடிகள், ஒரு தனி ஆள் என்று நான்கு காதல்களைச் சொல்கிறது படம். நான்கும் ஒவ்வொரு விதம். தாங்கள் முதன்முதலில் சந்தித்த ரயிலையே தங்களது நட்பின் அடையாளமாகக் கொண்டுள்ள, இன்னமும் காதலைச் சொல்லிக்கொள்ளாத ஒரு ஜோடி, தனது ஹை-ஸ்கூல் சீனியரை சில வருடங்கள் கழித்து தேடி வந்து நட்பாக்கிக் கொண்டு பழகும் பெண், மனைவியை இழந்து மகனுடன் தனிமையில் குடியின் துணையுடன் வாழ்பவனை வழிய வந்து நேசிக்கும் பெண், 6 வருடங்களாக காதலிக்குக் காத்திருந்து ‘Free Hugs’ Campaign செய்து வரும் ஒருவன். இவர்களது காதல்கள், முடிவுகள் தான் கதை.
படத்தில் நடித்த அனைவருமே அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்கள். முகங்கள் ஒரே மாதிரி இருப்பதால், அடையாளம் கண்டு கதைக்குள் செல்ல சில நிமிடங்கள் பிடித்தது. ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை. நம் லைலா, ஜெனிலியாக்கள் எல்லாம் கொரியப் பெண்களிடமிருந்து தான் “அந்த” மேனரிசத்தைப் பழகியிருப்பார்கள் போல. ஒவ்வொன்றும் லூசுத்தனமான க்யூட் ரியாக்ஷன்களால் மனதை அள்ளுகிறது. பிளாஷ்பேக் (முதலில் ப்ளாஷ்பேக் என்றே தெரியவில்லை!) உதவியுடன் முன்பின் என்று அருமையாக வரிசைப்படுத்தி, non-linear ஆக இருந்தாலும் குழப்பாமல் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
‘உண்மைக் காதலின் வெற்றி - பிரிவு’ –> இந்த அபத்தத்தை எங்கு படித்தேன், யார் சொல்லக்கேட்டேன் என்று நினைவில் இல்லை. ஆனால் இந்தப் படம் பார்க்கும் பொழுது அதை உணர்ந்தேன். சேர்ந்த காதல்களினால் ஏற்படும் திருப்தியை விட, பிரிந்த காதலால் உண்டான வலியை உணரமுடிந்தது. நான் காதல் திரைப்படங்களை அதிகம் பார்ப்பதில்லை. ஒரே மாதிரியான கதை சொல்லலால் அவை என்னை வசீகரிப்பதில்லை. அதிலும் முக்கியமாக வெளிநாட்டுப் படங்கள், கொரியப் படங்கள். ஆனால் இந்தப் படத்தை ரசித்தேன். மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.
Three couples and one single man experience the miracle of love during a Solar eclipse in South Korea. Movie is filled with Love, Love and Love only. Must Watch.
Trailer – https://www.youtube.com/
Torrent Link - http://
YouTube Link with ESubs –
Part 1: https://www.youtube.com/
Part 2: https://www.youtube.com/