Landscape No.2 | ஸ்லொவேனியா | 2008 |
12:03:00 AM
" இது எனக்கு விழவேண்டிய வெட்டு இல்ல. பாலுவுக்கு விழவேண்டியது. எதையோ முடிக்காம மிச்சம் வச்சிட்டு வந்திருக்கான்" - இது சண்டைக்கோழி படத்தில் வரும் வசனம். எழுதியவர், எஸ்.ராமகிருஷ்ணன். பிரபல தாதாவை ரோட்டில் போட்டு நெஞ்சு மேல் ஏறி மிதித்து விட்டு பஸ் ஏறி ஊருக்குப் போய்விடும் ஹீரோவைத் தேடி அவன் ஊருக்கே வரும் வில்லன், ஊர்த்திருவிழவில் களேபரத்தை உண்டு பண்ணி, கத்தியை ஓங்க, அது ஹீரோவின் அப்பா மேல் விழுந்துவிடும். அந்த ஊரில் பெரிய ஆளான அப்பா சொல்லும் 'அனுபவ' வசனம் தான் இது. பையன் செய்த தவறுக்கு அப்பனுக்கு வெட்டு விழும். (வழக்கமாக 'அப்பன் பட்ட கடனை பையன் அடைக்க வேண்டும்' என்று தான் சொல்வார்கள். இந்தப் படத்தில் கொஞ்சம் வித்யாசம்). அதனால் பரவாயில்லை. ஆனால், சுமார் 50 வருடங்களுக்கு முன் மிச்சம் வைக்கப் பட்ட / மறைக்கப்பட்ட ஒரு சம்பவத்திற்காக அதற்கு கொஞ்சம் கூடச் சம்பந்தமே இல்லாத ஒருவன், அவனைச் சுற்றியிருப்பவர்கள் என்று சம்பந்தசம்பந்தமில்லாதவர்கள் வெட்டு வாங்குவதென்பது ' அதனால் பரவைல்லை' ரகம் இல்லை.

இரண்டாம் உலகப் போர். வரலாற்றில் நாம் மறக்க வேண்டிய தருணங்கள். போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஸ்லொவேனியாவும், யுகோஸ்லேவியாவும் ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டு, ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி நாடுகளுக்கடியில் கொண்டுவரப்பட்டது. அப்போது கொன்று குவிக்கப்பட்டர்கள் எத்தனை பேர் என்பது இன்றளவும் கணக்கிடப்படமுடியாத ஒன்று. போர் முடிவிற்கு வந்த பிறகு ஸ்லொவேனியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதைய 'யுனைடட் இரோப்' மக்கள், 1990 களில் நடந்த 'பால்கன் ஸ்லாடர்' என்றழைக்கப்படும் படுகொலைல்களுக்குப் பின் தோண்டத் தோண்ட வந்து கொண்டிருக்கும் சடலக் குவியல்களையும், சுடுகாடாய் மாறிப் போயிருக்கும் ஊர்களையும் கண்டு, இவையெல்லம் எப்போது நடந்தது, யார் நடத்தியது என்பதெதுவும் தெரியாமல் மிரண்டு போய்தான் இருக்கின்றனர். மறைக்கப்பட்ட, புதைக்கப்பட்ட தம் முன்னோர்களின் 'வரலாறுகள்' என்னவென்று அவர்களுக்கு இன்றளவும் தெரியாமலே இருக்கிறது.
அப்படிப் பட்ட ஒரு மறைக்கப் பட்ட சம்பவம் தான், உலகப் போர் முடிந்த பின் ஆட்சியமைத்த அரசு, போரில் ஸ்லொவேனியா தோல்வியடைந்து அடிமைப்படக் காரணமாயிருந்த உயர்மட்ட அதிகாரிகள், ராணுவத்தலைவர்கள், செல்வந்தர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் எந்த ஒரு முறையான விசாரணையோ, வழக்கோ இல்லாமல் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம். அப்படி அந்தப் படுகொலை நடத்தப்பட்ட இடம் தான், Landscape No.2. இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்கிருக்கும் ஒரே சாட்சி, அப்போதைய அரசால் கையெழுத்திடப்பட்டு, முத்திரைகுத்தி பிறப்பிக்கப்பட்ட ஆணைப் பத்திரம்! இப்போது அது இருப்பது அந்த ஆணையை செயல்படுத்திய ஜெனரலிடம்!! 
சரி கதைக்கு வருவோம் - இந்த நல்லவர்கள் இருவரும் ஒரு நல்ல நள்ளிரவு வேளையில் ‘அந்த’ ஜெனெரல் வீட்டிற்கு திருடப் போகிறார்கள் (பக்கத்து வீட்டுக்காரி கொடுத்த தகவலின் படி ஜெனெரல் இப்போது தன் பேரப்பிள்ளைகளுடன் மீன் பிடிக்கவோ எங்கயோ போயிருப்பார்). போல்டேவின் குறி அந்த ஜெனெரல் வீட்டில் இருக்கும் Landscape No.2 வை தத்ரூபமாகக் காட்டும் ஒரு ஆயில் பெய்ண்டிங். மியூசியத்திலிருந்து ஜெனெரல் அதை திருடி வந்ததாகச் சொல்லும் போல்டே, அதை அவரிடமிருந்து திருடி, 10000 டாலர் கேட்கலாம் என்றும் வேறு எதையும் தொடாதே என்றும் சொல்கிறான். ஆனால் செர்கெஜ் அந்த பெய்ண்டிங் பின்னால் இருக்கும் ஒரு ரகசிய லாக்கரில் கொஞ்சம் பணம் இருப்பதை கண்டு, மொத்தமாக என்னென்ன எடுக்கிறோம் என்று தெரியாமலே அள்ளிப் போட்டுக் கொண்டு வந்துவிடுகிறான், அந்த ஆணைப்பத்திரத்தையும் சேர்த்து! செர்கெஜ், பெய்ண்டிங்கை போல்டே வீட்டில் வைத்துவிட்டு, ஜாஸ்னா வீட்டிற்கு வந்து மற்ற பேப்பர்களை அலமாரி மேல் வீசிவிட்டு, பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, "அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல, பக்கத்து வீட்டுக்காரி 'மாக்தா' போன் பண்ணா, நா வரேன்" என்று சொல்லிவிட்டு 'வேலை'யைப் பார்க்கப் போய்விடுகிறான்.
வீட்டிற்கு வந்து பார்க்கும் ஜெனெரல், திறந்து கிடக்கும் லாக்கரைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்து விடுகிறார். 80 வயதைத் தாண்டிவிட்ட அவருக்கு Landscape No.2 விஷயம் வெளியே தெரிந்து சாகப் போகும் சமயம் தன் பெயர் கெடுவதில் உடன்பாடுயில்லை. அந்த படுகொலைப் பற்றி நங்கு தெரிந்த தன் பழைய ஆள் ஒருவனைக் கூப்பிட்டு, அந்த பெய்ண்டிங் பற்றித் தெரிந்த அனைவரது லிஸ்டையும் கொடுத்து 'விசாரிக்கும்'படி சொல்கிறார். அதில் அந்த வேலைக்காரி பெயரும் உண்டு.
முதலில் வேலைக்காரியைப் பிடித்து, பின் போல்டேவைக் கொன்று, பின் ஜாஸ்னாவைக் கொன்று, பின் அவன் பக்கத்து வீட்டுக்காரனைக் கொன்று, மாக்தாவைக் கொன்று என்று ரத்தக்களரியாகக் கொன்றுகொண்டே வருகிறான் அந்த ‘ஹிட்மேன்’. பழி ஆனால் செர்கெஜ் மீதுதான். போலீஸ் அவனை சைக்கோ கொலைகாரன் என்கிறது. இடையில் ஜெனரலும் இறந்துவிட, ராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடக்கிறது. "நடுவில் நான் இறந்து விட்டால் பிரச்சனை இல்லை விஷயத்தை அப்படியே விட்டுவிடு" என்று ஜெனெரல் தன் ஆளிடம் முன்பே சொல்லியிருப்பார். ஆனால் அந்த ஆள் எடுத்த வேலையை சுத்தமாக முடித்துவிட்டு, அதே Landscape No.2 இடத்தில் பள்ளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான். செர்கெஜ் அனைத்தையும் இழந்து, போலீஸால் கைது செய்யப்படுகிறான். எப்படி, என்ன, எதற்கு நடந்தது என்பது செர்கெஜ் முதற்கொண்டு யாருக்கும் தெரியாமல், Landscape No.2 வின் ரகசியம் மீண்டும் மறைக்கப்பட, விஷயம் முடிக்கபடாமலேயே படம் முடிகிறது. மொத்ததில் Landscape No.2 எனக்கு மிகவும் பிடித்த உலகத் திரைப்படங்கள் லிஸ்டில். அதன் லிங்க் இதோ...
http://rapidshare.com/files/289245892/andscT.part1.rar
http://rapidshare.com/files/289246343/andscT.part2.rar
http://rapidshare.com/files/289246689/andscT.part3.rar
http://rapidshare.com/files/289246970/andscT.part4.rar
subs
http://www.FastShare.org/download/wthd_landscape2_subs.rar
2 comments
இந்த படத்தை 2 நாட்களுக்கு முன் எழுத நினைத்து மூட் இல்லாமல் விட்டு விட்டேன்...
ReplyDeleteஇந்த படத்தை நானும் பிலீம் பெஸ்டிவலில் பார்த்தேன்... நாம் சந்தித்து இருக்கலாம் பிரதீப்...
இந்த படத்துக்கு நான் எழுதிய விமர்சன்ம் இதோ...http://jackiesekar.blogspot.com/2010/02/landscape-no2-18.html
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...