என்னைப் பற்றி...



முழுப்பெயர்: பிரதீப் பாண்டியன் செல்லத்துரை

பிறந்தது - போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்

வளர்ந்தது - தூத்துக்குடி

இப்போது குப்பைக் கொட்டிக் கொண்டிருப்பது - பெங்களூரு...


வேறு என்ன சொல்ல... எனக்கு நான் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலை தவிர மற்ற அனைத்திலும் பன்மடங்கு ஆர்வம் அதிகம்.

சிறுகதை, போட்டோ, குறும்படங்கள், நடிப்பு, தமிழ் புத்தகங்கள் என்று எனது ஆர்வம் கொஞ்சம் நீளமானது. எல்லாவற்றிக்கும் மேலாக சினிமா மீது எப்போதும் தீராத காதல் உண்டு... தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல கமல் வழியில் என்னாலும் உதவ முடியும் என்ற எண்ணம் எனக்கு உண்டு...

பிடித்த படங்கள் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் வசூல்ராஜா, முத்து, பாட்ஷா, The Star Maker, Old Boy, Three Colors - Blue, ஆயிரத்தில் ஒருவன், Inglorious Bastards, Identity, Red Cliff, The Shawshank Redemption, City of God, கன்னத்தில் முத்தமிட்டால், No Man's Land இப்படி எத்தனையோ இருக்கிறது...

கிறுக்கல்களும் ஒரு கலைஞன் கண்ணிற்கு ஓவியமாகத் தெரிய வேண்டும் - இது யாரோ சொன்னது. விஷயம் என்னவென்றால், நான் ரொம்ப நாட்களாக கிறுக்கல்களை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஓவியம் ஏதாவது தென்படுகிறதா என்று...